Kane Williamson : ஆட்டத்தின் பாதியில் தப்பு கணக்கு போட்டுவிட்டோம் – வில்லியம்சன் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 54 ஆவது போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமை

Williamson
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 54 ஆவது போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

williamson

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பெங்களூரு அணி. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 70 ரன்களை குவித்தார்.

இதனால் 176 ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹெட்மயர் 75 ரன்களும், குர்கிரத் சிங் 65 ரன்களையும் குவித்தனர். ஹெட்மயர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Hetmyer

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வில்லியம்சன் கூறியதாவது : நாங்கள் ஆட்டத்தின் பாதியிலேயே எங்களது வெற்றி எங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நினைத்தோம். ஆனால், பெங்களூரு அணி வீரர்கள் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்து எங்களின் எண்ணத்தை பொய்யாக்கினார்கள்.

மேலும், 10-15 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். கடந்த இரு போட்டிகளாக தோல்விகளை சந்தித்து விட்டோம். தற்போது தோல்வியை நினைத்து வருந்துவதைவிட அடுத்த போட்டியை நினைத்து இந்த தோல்வியை மறக்க வேண்டும் என்று வில்லியம்சன் கூறினார்.

Advertisement