விராட் கோலி விக்கெட் ஸ்பெஷல்.. இது நடக்கலன்னா இந்தியாவின் தோல்வியை நிறுத்த முடியாது.. வில்லியம் பேட்டி

William ORourke
- Advertisement -

பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறும் தருவாயில் உள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை 46 ரன்களுக்கு நியூசிலாந்து சுருட்டியது. அதிகபட்சமாக ரிசப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5, வில்லியம் ஓரோர்கே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் பின் களமிறங்கிய இந்தியா முடிந்தளவுக்கு போராடி 462 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

நியூஸிலாந்து வெல்லுமா:

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 35, விராட் கோலி 70, கேப்டன் ரோஹித் சர்மா 52, சர்பராஸ் கான் 150, ரிசப் பண்ட் 99 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 3, வில்லியம் ஓரோர்கே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் 107 ரன்களை துரத்தும் நியூஸிலாந்து 0-0 என்ற நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்தியாவின் ஜாம்பவான் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தது இளம் நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓரோர்கே தெரிவித்துள்ளார். அத்துடன் ஐந்தாவது நாளில் மழை மட்டும் வராமல் போனால் கண்டிப்பாக தரமான இந்திய அணியை வீழ்த்துவதிலிருந்து தங்களை நிறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

விராட் கோலி விக்கெட்:

“இங்கிருந்து இது எளிய வெற்றியாக இருக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் எங்களுக்கு எதிராக உலகத்தரம் வாய்ந்த அணி உள்ளது. ஆனால் நாளை நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களுடைய நன்மைக்காக மழை ஒதுங்கியிருக்கும் என்று நம்புகிறோம். அது நடந்தால் வெற்றியை உடைப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும்”

இதையும் படிங்க: பேசி வெச்சுருந்தோம்.. குதிக்க இதான் காரணம்.. இது நடந்தா நியூஸிலாந்தை வீழ்த்த முடியும்.. சர்பராஸ் பேட்டி

“கண்டிப்பாக நம்முடைய விளையாட்டின் சிறந்த ஒரு வீரரான விராட் கோலி போன்றவரின் விக்கெட்டை எடுத்தது மிகவும் ஸ்பெஷல். அவரைப் போன்றவர்களை பார்த்து தான் நாங்கள் வளர்ந்தோம். எனவே இந்தியாவுக்கு வந்து அந்த விக்கெட்டை எடுத்தது ஸ்பெஷலாக இருக்கும். மிகவும் வெப்பமாக இருந்த தருணத்தில் சர்பராஸ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நன்றாக பேட்டிங் செய்தனர். இருப்பினும் இரண்டாவது புதிய பந்து எங்களுக்கு சாதகமாக வேலை செய்தது” என்று கூறினார்.

Advertisement