பேசி வெச்சுருந்தோம்.. குதிக்க இதான் காரணம்.. இது நடந்தா நியூஸிலாந்தை வீழ்த்த முடியும்.. சர்பராஸ் பேட்டி

Sarfaraz Khan
- Advertisement -

பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46க்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 402 ரன்கள் அடித்து 356 ரன்களை முன்னிலையாகப் பெற்று அசத்தியது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முடிந்தளவுக்கு போராடி 462 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 35, ரோஹித் சர்மா 52, விராட் கோலி 70, ரிஷப் பண்ட் 99, சர்பராஸ் கான் 150 ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 3, வில்லியம் ஓரோர்கே 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

குதித்த சர்பராஸ்:

இறுதியில் 107 ரன்களை துரத்தும் நியூசிலாந்து நான்காவது நாள் முடிவில் 0-0 என்ற நிலையில் இருக்கிறது. அதனால் 10 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள அந்த அணி வெற்றி பெறுவதற்கே பிரகாச வாய்ப்புள்ளது. முன்னதாக இந்தப் போட்டியில் ஒரு தருணத்தில் ரிஷப் பண்ட் டபுள் ரன்கள் எடுக்கும் போது பந்தை பார்த்து கொண்டே ஓடி ரன் அவுட்டாக தெரிந்தார். அதைத் தடுப்பதற்காக சர்பராஸ் கான் தாவி தாவி குதித்து சைகை செய்தார்.

அதைப் பார்த்து ரிஷப் பண்ட் மீண்டும் ஓடியதுடன் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பந்தை தவற விட்டதால் அந்த இடத்தில் ரன் அவுட் தவறியது. இந்நிலையில் ரிஷப் பண்ட் முழங்காலில் காயத்தை சந்தித்ததால் 2 ரன்கள் எடுக்க வேண்டாம் என்று அணி நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்பராஸ் கூறியுள்ளார். மேலும் 5வது நாளின் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்தால் இப்போட்டியில் இந்தியா வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்தியாவுக்கு வாய்ப்பு:

“நேற்று முன்தினம் ரிஷப் காயத்தை சந்தித்தார். அதனால் பேட்டிங் செய்யும் போது அவருடன் கவனமாக ஓட வேண்டும் என்று நாங்கள் அணியில் விவாதித்தோம். ஆனால் அந்த நேரத்தில் 100 ரன்களை நெருங்கியதால் நான் டபுள் ரன் எடுக்க அழைத்தேன். அப்போது சிங்கிள் எடுத்த பின்பே அவருக்கு காயம் இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். அதனால் உடனடியாக என்னுடைய கையை உயர்த்தி நிறுத்துங்கள், நிறுத்துங்கள் என்று கத்தினேன்”

இதையும் படிங்க: அப்பா மேல இப்படி ஒரு பாசமா? சர்பராஸ் கானின் ஜெர்சி நம்பருக்கு பின்னால் உள்ள – சுவாரசிய பின்னணி

“ஆனால் அவர் பார்க்கவில்லை. நல்லவேளையாக அவர் பாதுகாப்பாக இருந்தார். கடவுளுக்கு நன்றி. கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கியது முதல் இந்தியாவுக்காக சதமடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதை செய்ததில் மகிழ்ச்சி. ஆனால் நாளை நியூசிலாந்துக்கு கடினமாக இருக்கும். ஏனெனில் பிட்ச் வெடிக்கத் துவங்கியுள்ளதால் பந்து நகர்கிறது. எனவே ஆரம்பத்திலேயே நாங்கள் சில விக்கெட்டுகளை எடுத்தால் நியூசிலாந்தும் இதே சூழ்நிலையில் இருப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement