- Advertisement -
உலக கிரிக்கெட்

பாவம்யா மனுஷன்.. 13 முறை.. 26 வயதிலேயே மொத்தமாக ஓய்வு பெறவிருக்கும் ஆஸி வீரர்.. ரசிகர்கள் சோகம்

உலகில் நடைபெறும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அவ்வப்போது காயமடைவது வழக்கமாகும். ஆனால் ஷேன் பாண்ட் போன்ற சில ஜாம்பவான் வீரர்கள் காயத்தாலேயே கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அது போல தற்போது ஆஸ்திரேலியாவை வில் புகோவஸ்கி 26 வயதிலேயே அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த அவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது 17வது வயதிலேயே உள்ளூர் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். அதற்கு முன்பாக பள்ளியில் கால்பந்து விளையாடும் போதும் கிரிக்கெட்டுக்கு பயிற்சி எடுக்கும் போதும் அவர் தலையில் காயங்களை சந்தித்தார். அத்துடன் வீட்டில் இருக்கும் போது ஒருமுறை அவருடைய தலையில் கதவு அடித்ததாக அவரே நாளடைவில் கூறியுள்ளார்.

- Advertisement -

விளையாடிய காயம்:

இருப்பினும் அவற்றையெல்லாம் கடந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2017 பிப்ரவரி மாதம் தனது முதல் போட்டியிலேயே ஃபீல்டிங் செய்யும் போது காயமடைந்தார். அதன் பின் 2017 அக்டோபர் மாதம் குயின்ஸ்லாந்து அணிக்கு எதிரான உள்ளூர் போட்டியில் ஹெல்மெட்டில் அடி வாங்கிய அவர் நவம்பர் மாதம் டாஸ்மானியாவுக்கு எதிரான போட்டியில் காயத்தை சந்தித்தார்.

அதைத்தொடர்ந்து 2018 மார்ச் மாதம் நியூ சவுத் வேல்ஸ்க்கு எதிரான போட்டியில் பவுன்சரால் தலையில் அடிவாங்கிய அவர் 2020 பிப்ரவரி மாதம் பயிற்சி தரையில் பேட் தடுத்து காயமடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் போராடி காயத்திலிருந்து குணமடைந்த அவர் 2020 நம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போட்டியில் அட்டகாசமாக விளையாடி 61, 10 ரன்கள் எடுத்த அவர் பாதியிலேயே தோளில் காயமடைந்ததால் மார்கஸ் ஹரிஷ் சேர்க்கப்பட்டது இந்திய ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

- Advertisement -

26 வயதிலேயே:

அதன் பின் கடந்த 4 வருடங்களில் 4 முறை காயத்தை சந்தித்த அவர் மொத்தமாக தமது கேரியரில் 13 முறை காயங்களை சந்தித்துள்ளார். எனவே இப்படியே போனால் உடல்நிலை மோசமாகிவிடும் என்பதால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுமாறு வில் புகோஸ்விக்கு மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதை ஏற்று புகோஸ்வி ஓய்வு பெற உள்ளதாக லண்டனின் விஸ்டன் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 24 பால் கேம் வேலையாகாது.. உம்ரான் மாலிக் தடுமாறக் காரணமான இதை மாத்தனும்.. பராஸ் மாம்ப்ரே பேட்டி

அத்துடன் விக்டோரியா வாரியம் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவருடைய மாகாண அணியின் ஒப்பந்தத்தை முடித்துள்ளதாக விஸ்டன் இணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 36 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள புகோஸ்வி 7 சதங்கள் உட்பட 2350 ரன்களை 45.19 சராசரியில் எடுத்துள்ளார். ஆனால் திறமையான அவரின் சர்வதேச கிரிக்கெட் கேரியர் வெறும் ஒரு டெஸ்ட் போட்டியுடன் காயத்தால் பாவமாக முடிய உள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -