
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடுவது என்பது மிகக் கடினமான ஒரு விடயமாக இருந்து வருகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு ஆஸ்திரேலியா அணியில் சிறப்பான வீரர்கள் இடம் பிடித்து தொடர்ச்சியாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமாகி விளையாடும் வீரர்கள் மீது ரசிகர்களுக்கு மத்தியிலும் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்காக 20 வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு இளம் வீரரான வில் புக்கோவ்ஸ்கிக்கு கிடைத்தது. 19 வயதுக்குட்பட்டோர் அணியிலிருந்தே ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வந்த அவர் கடந்த 2021-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒரே போட்டியில் மட்டுமே விளையாடி 62 ரன்களை குவித்துள்ளார்.
ஆனாலும் தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்நாட்டு கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவருக்கு காயம் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியது. அடிக்கடி தலையில் ஏற்படும் காயம் காரணமாக அவர் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட வேளையில் அவருக்கு பந்து பலமுறை தொடர்ந்து தலையில் தாக்கிக் கொண்டிருந்தது.
இப்படி அடிக்கடி அவர் தலையில் காயம் அடைய என்ன காரணம்? என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்த வேளையில் அவர் பந்து தலையில் தாக்கி விடுமோ என்கிற பயத்தால் விளையாடுவதால் தான் பேட்டிங் யுக்தியை மறந்து அவர் அடிக்கடி காயமடைகிறார் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஒரு தொடரின் போது மீண்டும் அவருக்கு பந்து தலையில் தாக்கியது, இதனை அடுத்து அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இனி அவர் கிரிக்கெட் விளையாடவே கூடாது என்றும் தற்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இனி அவர் கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்து விட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : இதை செஞ்சா என்னை யாராலும் நிறுத்த முடியாது.. கேரியரின் கடினமான பேட்ஸ்மேன் பற்றி.. பும்ரா ஓப்பன்டாக்
இதன் காரணமாக 26 வயதிலேயே அவரது சர்வதேச கிரிக்கெட் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தற்போது மீண்டும் அவர் கிரிக்கெட் விளையாட முடியாது என்கிற சோகமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ள அவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளதாகவும் அவர் மீண்டும் திரும்பி வரும்போது ஓய்வை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.