இதை செஞ்சா என்னை யாராலும் நிறுத்த முடியாது.. கேரியரின் கடினமான பேட்ஸ்மேன் பற்றி.. பும்ரா ஓப்பன்டாக்

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்றது. அந்த வெற்றிக்கு 15 விக்கெட்டுகளை 4.17 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா முக்கிய பங்காற்றினார். குறிப்பாக ஃபைனல் உட்பட தேவைப்படும் அனைத்து நேரங்களிலும் விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டு தொடர்நாயகன் விருதை வென்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜஸ்ப்ரித் பும்ரா 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். குறிப்பாக தம்முடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார். அதனால் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரும் பவுலர் என்று விராட் கோலி பாராட்டினார்.

- Advertisement -

சவாலான பேட்ஸ்மேன்:

மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த அந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்வதாக ஜாம்பவான் வாஷிம் அக்ரம் பாராட்டினார். அத்துடன் பும்ரா சிறந்த ஆல் ஃபார்மட் பவுலராக திகழ்வதாக ரிக்கி பாண்டிங் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள சத்தியபாமா கல்லூரியில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அப்போது உங்களுடைய கேரியரில் உங்களுக்கே சவாலை கொடுத்த பேட்ஸ்மேன் யார் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு யாருடைய பெயரையும் சொல்லாத பும்ரா சிறப்பாக பந்து வீசினால் தம்மை எந்த பேட்ஸ்மேன்களாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாருங்கள் இதற்கு நான் நல்ல பதிலைக் கொடுக்க விரும்புகிறேன்”

- Advertisement -

யாராலும் தடுக்க முடியாது:

“இருப்பினும் உண்மையில் யாரும் என்னுடைய தலை மேல் இருப்பதை நான் விரும்பவில்லை. கண்டிப்பாக நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் என்னுடைய வேலையை சரியாக செய்தால் இந்த உலகில் யாரும் என்னை தடுத்து நிறுத்த முடியாது என்று நான் எனது தலைக்குள் எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். எனவே நான் எதிரணியை பார்க்காமல் என்னைப் பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: அதுக்கு வாய்ப்பில்லை.. 21ஆம் நூற்றாண்டின் சிறந்த தொடரில் இது தான் நடக்கும்.. முன்னாள் ஆஸி வீரர் கணிப்பு

“என்னுடைய அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாடு இருந்தால், எனக்கு நானே சிறந்த வாய்ப்புகளை கொடுத்தால் மற்ற அனைத்தையும் அதுவே பார்த்துக் கொள்ளும். அதனால் பேட்ஸ்மேன் என்னை விட சிறந்தவர் என்பது போல் நினைக்க வேண்டியதில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்ததாக நடைபெறும் டெஸ்ட் தொடருக்காக பும்ராவுக்கு தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement