முதல் சீசனிலேயே முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிய குஜராத் ! கோப்பையும் வெல்லுமா, வரலாறு சொல்வது இதோ

Hardik Pandya GT
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதால் இந்த அணி எங்கே வெல்லப் போகிறது என அனைவரும் குறைத்து எடை போட்டனர். ஆனால் ஆரம்பம் முதலே மும்பை, சென்னை போன்ற வெற்றிகரமான அணிகளை காட்டிலும் அற்புதமாக செயல்பட்டு கில்லியாக சொல்லி அடித்து 14 போட்டிகளில் 10 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

GT

- Advertisement -

அதை தொடர்ந்து துவங்கிய பிளே ஆப் சுற்றில் 2-வது இடம் பிடித்த ராஜஸ்தானை குவாலிஃபயர் 1 போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை அட்டகாசமாக சேசிங் செய்து வெற்றி பெற்ற குஜராத் நேரடியாக தனது முதல் வருடத்திலேயே பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று மீண்டும் சாதித்துக் காட்டியுள்ளது. அதன் காரணமாக ஆரம்பத்தில் குறைத்து எடை போட்டவர்களின் கணிப்புகளை பொய்யாக்கிய அந்த அணி தற்போது கோப்பையை வெல்லக் கூடிய ஒரு அணியாக காட்சியளிக்கிறது.

பிளே ஆப் சுற்றில் நேரடியாக பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமும் சாதகமும் என்ற நிலையில் கடைசி முயற்சியாக பைனளிலும் சிறப்பாக செயல்பட்டு குஜராத் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் வரலாற்றில் இதேபோல முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் கோப்பையை வென்றதா என்பது பற்றிய வரலாற்று சுவடுகளை பார்ப்போம்.

Hardik Pandya GT Vs RR 2.jpeg

1. 2008 – 2010 வரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் உலககோப்பைகளை போல 2 அரையிறுதிப் போட்டிகளில் வாயிலாக பைனலில் விளையாடும் அணிகள் தீர்மானிக்கப்பட்டு வந்தன. அந்த நிலைமையில் வித்தியாசமாகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதற்காகவும் 2011இல் முதல் முறையாக எலிமினேட்டர் மற்றும் 2 குவாலிபயர் போட்டிகள் அடங்கிய பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

- Advertisement -

அந்த வருடத்தில் நடந்த குவாலிபயர் 1 போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பெங்களூருவை குவாலிபயர் 1 போட்டியில் சாய்த்த 2-வது இடம் பிடித்த சென்னை நேரடியாக ஃபைனலுக்கு சென்று பின்னர் குவாலிபயர் 2 போட்டியில் வென்று வந்த பெங்களூருவை மீண்டும் தோற்கடித்து 2010க்கு பின் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

Gambhir

2. 2012 சீசனிலும் புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்த கொல்கத்தா முதலிடம் பிடித்த டெல்லியை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்து நேரடியாக பைனலுக்கு சென்ற நிலையில் 4-வது இடம் பிடித்து எலிமினேட்டர் குவாலிபயர் 2 போட்டியில் வென்று வந்த சென்னையை தோற்கடித்த கொல்கத்தா முதல் சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

3. 2013 சீசனிலும் புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்த மும்பையை முதலிடம் பிடித்த சென்னை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்து நேரடியாக பைனலுக்கு சென்றாலும் பின்னர் குவாலிபயர் 2 போட்டியில் வென்று வந்த மும்பையிடம் இறுதி போட்டியில் தோல்வியடைந்தது.

mumbai

4. 2014இல் புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்த கொல்கத்தா முதலிடம் பிடித்த பஞ்சாப்பை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்து நேரடியாக பைனலுக்குள் நுழைந்து அதன்பின் குவாலிபயர் 2 போட்டியில் வென்று மீண்டும் வந்த பஞ்சாப்பை தோற்கடித்து 2-வது கோப்பை வென்றது.

- Advertisement -

5. 2015இல் புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்த மும்பை முதலிடம் பிடித்த சென்னையை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்று பின்னர் குவாலிபயர் 2 போட்டியில் வென்று வந்த சென்னையை மீண்டும் தோற்கடித்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

mumbai

6. 2016 சீசனில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத்தை 2-வது இடம் பிடித்த பெங்களூரு குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்றாலும் 3-வது இடத்தைப் பிடித்து எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 போட்டியில் வென்று வந்த ஹைதராபாத்திடம் பைனலில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

7. 2017ஆம் ஆண்டில் புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்த புனே முதலிடம் பிடித்த மும்பையை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்றாலும் குவாலிபயர் 2 போட்டியில் வென்று மீண்டும் வந்த மும்பையிடம் பைனலில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

csk

8. 2018 சீசனில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ஹைதராபாத்தை 2-வது இடம் பிடித்த சென்னை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்து பைனலுக்கு நேரடியாக தகுதி பெற்று பின்னர் குவாலிபயர் 2 போட்டியில் வென்று வந்த ஹைதராபாத்தை மீண்டும் ஃபைனலில் தோற்கடித்து 3-வது கோப்பை வென்றது.

9. 2019 வருடத்தில் புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்த சென்னையை முதலிடம் பிடித்த மும்பை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்து நேரடியாக பைனலுக்கு சென்று பின்னர் குவாலிபயர் 2 போட்டியில் வென்று சென்னையை மீண்டும் இறுதிப் போட்டியில் தோற்கடித்து 4-வது சாம்பியன் பட்டம் வென்றது.

Ganguly-ipl
IPL MI

10. துபாயில் நடந்த 2020 சீசனில் புள்ளிப்பட்டியலில் 2-வது பிடித்த டெல்லியை முதலிடம் பிடித்த மும்பை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்து நேரடியாக பைனலுக்கு சென்ற நிலையில் குவாலிபயர் 2 போட்டியில் வென்று வந்த டெல்லியை மீண்டும் பைனலில் தோற்கடித்து 5-வது கோப்பையை வென்றது.

11. 2021 சீசனில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லியை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்த சென்னை நேரடியாக பைனலுக்கு சென்று பின்னர் எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 போட்டிகளில் வென்று வந்த கொல்கத்தாவை இறுதிப்போட்டியில் தோற்கடித்து 4-வது கோப்பை வென்றது.

csk 1

மொத்தத்தில் 11 சீசன்களில் நடந்த குவாலிபயர் 1 போட்டிகளில் வென்று நேரடியாக பைனலுக்கு நுழைந்த 11 அணிகளில் 9 அணிகள் ஃபைனலில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. அந்த வகையில் இம்முறை குஜராத்தும் முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வரலாற்றின் அடிப்படையில் அற்புதமான வாய்ப்புள்ளது என்றே கூறலாம்.

Advertisement