எனக்காக கோடிகளை வாரி இறைத்த அந்த அணியின் வெற்றிக்காக உயிரையும் கொடுப்பேன் – வெ.இ வீரர் நெகிழ்ச்சி

WI
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்திக்கிறது. இந்த தொடரில் பங்கேற்று கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும் மும்பையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைப்பதற்காக இதர அணிகளை காட்டிலும் கடந்த வாரத்திற்கு முன்பே குஜராத் மாநிலம் சூரத் நகரில் வலை பயிற்சியை தொடங்கியது.

ipl trophy

- Advertisement -

அதேபோல் இந்த தொடரில் பங்கேற்பதற்காக சமீபத்தில் நடந்த இலங்கை தொடரை முடித்துக்கொண்டு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய இந்திய வீரர்கள் அந்தந்த அணிகளில் இணைந்துள்ளனர். அவர்களை போல இந்த தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட பல நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் அந்தந்த அணிகளில் இணைய தொடங்கியுள்ளனர்.

ஹைதெராபாத் அணியில் நிக்கோலஸ் பூரான்:
அந்த வகையில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் தன்னைக் ஒப்பந்தம் செய்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் தன்னை 10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்த ஹைதெராபாத் அணிக்காக முழு மூச்சுடன் விளையாட உள்ளதாக நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

Pooran

இது பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியது பின்வருமாறு. “கடந்த வருடம் ஒரு சீசனில் மோசமாக விளையாடியதற்காக நான் மோசமான வீரர் என அர்த்தமில்லை. சர்வதேச போட்டிகளில் நான் சிறப்பாக செயல்படுவதை அனைவரும் பார்த்தனர். எனவே என்னைப் பொறுத்தவரை என் மீது மிகப் பெரிய முதலீடு செய்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்க உள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த அவர்களுக்காக எனக்குள் இருக்கும் திறமையானவரை காண்பிக்க விரும்புகிறேன்” என கூறினார்.

- Advertisement -

நன்றி உணர்ச்சியுடன் பூரன்:
அவர் இப்படி கூறுவதில் ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளது. ஏனெனில் கடந்த வருடம் 7.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 12 போட்டிகளில் வெறும் 85 ரன்களை 7.72 என்ற படுமோசமான சராசரியில் எடுத்தார். அதிலும் குறிப்பாக அந்தப் 12 போட்டிகளில் 5 முறை டக் அவுட்டான அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையையும் படைத்தார். அதன் காரணமாக அவரை பஞ்சாப் அணி நிர்வாகம் கழட்டி விட்டது.

pooran

போதாக்குறைக்கு கடந்த வருடம் நடந்த டி20 உலகக்கோப்பையிலும் அவர் மோசமாக செயல்பட்டார். அதன் காரணமாக சமீபத்தில் நடந்த ஏலத்தில் அவரை யாருமே வாங்க மாட்டார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். அந்த வேளையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3 போட்டிகளிலும் அசத்திய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்காக தனி ஒருவனாக போராடினார்.

- Advertisement -

அதன் காரணமாக அவர் மீது நம்பிக்கை வைத்த ஹைதராபாத் அணி நிர்வாகம் அவரை 10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு போட்டி போட்டு வாங்கியது. அந்த அளவுக்கு மோசமான நிலையில் இருந்த தன் மீது நம்பிக்கை வைத்துள்ள ஹைதெராபாத் அணிக்காக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் தம்மால் முடிந்த அனைத்தையும் கொடுக்க தயார் என நிக்கோலஸ் பூரன் கூறியுள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

Pooran

செயலில் காட்ட உள்ளேன்:
“அனைவருமே ஒரு சில நேரங்களில் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். அந்த வகையில் கடந்த வருடம் ஒரு போட்டியில் நான் முதல் பந்தில் டக் அவுட் ஆனேன். அடுத்த போட்டியில் 2-வது பந்தில் டக் அவுட் ஆனேன். அதன்பின் ஒரு பந்தை எதிர் கொள்வதற்கு முன்பாகவே ரன் அவுட் முறையில் டக் அவுட் ஆனேன். இருப்பினும் அதைப் பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் அதன் வாயிலாக நிறைய கற்றுக் கொண்டுள்ள நான் தற்போது நான் ஒரு நல்ல வீரராகவே மாறியுள்ளேன் என நம்புகிறேன்.

- Advertisement -

ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் சரியாகச் செயல்படாத நேரத்தில் ஊடகங்கள் உங்களை குறிவைக்கும். நிறைய ரசிகர்கள் விமர்சிப்பார்கள். அது போன்ற அம்சங்கள் ஒரு கிரிக்கெட் வீரரை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு அந்த வெளிப்புற சத்தங்களை பெரிதுபடுத்தாமல் நமது அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சி செய்ய வேண்டும்” என இது பற்றி நிக்கோலஸ் பூரன் மேலும் கூறினார்.

இதையும் படிங்க : மைதானத்திலேயே சுருண்டு விழுந்த வீராங்கனை! ஆம்புலன்சில் ஏற்றிச்செல்லப்பட்டார் – என்ன நடந்தது?

அவர் கூறுவது போல கடந்த வருடம் விதவிதமாக டக் அவுட்டான அவர் இப்படியும் டக் அவுட்டாக முடியுமா என இந்த உலகிற்கு காண்பித்தார். அதன் காரணமாக கடும் விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளான அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் இந்த வருடம் மிகச் சிறப்பாக செயல்பட்டு தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement