தினேஷ் கார்த்திக்க்கு டி20 உலககோப்பை வாய்ப்பு கொடுக்கலாமா – ஆஸி ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் அளித்த பதில் இதோ

dinesh
Advertisement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 9-ஆம் தேதியன்று துவங்கியது. டெல்லியில் நடைபெற்ற அந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 212 ரன்கள் இலக்கை அதிரடியாக சேசிங்க் செய்து எட்டிப்பிடித்த தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் மிரட்டலாக செயல்பட்டு 211 ரன்கள் குவித்த இந்தியா பந்துவீச்சில் கடைசி 10 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி முதல் போட்டியிலேயே சொந்த மண்ணில் தலைகுனியும் தோல்வியை சந்தித்தது.

miller

இதையடுத்து ஜூன் 12இல் நடைபெறும் இந்த தொடரின் 2-வது போட்டியில் இந்தியா வெற்றிக்காக போராட உள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கான தகுதியான தரமான வீரர்களை கண்டறியும் ஒரு வாய்ப்பாக இந்த தென்னாபிரிக்கா தொடர் கருதப்படுகிறது. அதனால் அடுத்து வரும் போட்டிகளில் வெவ்வேறு வீரர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டிகே கம்பேக்:
முன்னதாக இந்த தொடருக்கு முன்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்த தமிழகத்தின் சீனியர் நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் போன்ற இதர பினிஷெர்களை காட்டிலும் அற்புதமாக பேட்டிங் செய்தார். குறிப்பாக விராட் கோலி, டுப்லஸ்ஸிஸ், கிளென் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறிய பெரும்பாலான போட்டிகளில் மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் களமிறங்கி பட்டையை கிளப்பிய அவர் அதிரடியான ரன்களை குவித்து குறைந்தது 4 – 5 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக் கொடுத்தார்.

Dinesh Karthik 3

மொத்தம் 16 போட்டிகளில் 330 ரன்களை 183.33 என்ற தெறிக்கவிடும் ஸ்டிரைக் ரேட்டில் விளாசிய அவர் ரசல், லிவிங்ஸ்டன் போன்ற இதர காட்டடி பேட்ஸ்மேன்களை காட்டிலும் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை விளாசி அதற்கான “சூப்பர் ஸ்ட்ரைக்கர்” விருதையும் வென்றார். 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்காக விளையாடியே தீர வேண்டும் என்ற லட்சியத்துடன் அந்தளவுக்கு வெறித்தனமாக பேட்டிங் செய்த அவரின் உழைப்புக்கு பரிசாக 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு தற்போது தாமாக தேடி வந்தது.

- Advertisement -

பாண்டிங் கருத்து:
அதில் டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கிய அவருக்கு 2 பந்துகளை மட்டுமே எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ரிஷப் பண்ட், இஷான் கிசான் என தேவைக்கு அதிகமான இளம் விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் 36 வயதை கடந்த அவர் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே டி20 உலக கோப்பையில் இடம் கிடைக்கும் என்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் தங்கள் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக் விளையாடாமல் போனால் அது தமக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Ricky-Ponting

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரை கண்டிப்பாக வைத்துக் கொள்வேன். அவரை 4 அல்லது 5-வது பேட்டிங் இடத்தில் தேர்வு செய்வேன். இந்த வருடம் பெங்களூரு அணிக்காக அவர் போட்டிகளை பினிஷிங் செய்த விதம் வேற லெவலில் இருந்தது. ஐபிஎல் தொடரை நீங்கள் பார்க்கும்போது ஒரு நல்ல வீரர் ஒரு சீசனில் 2, 3 அல்லது 4 போட்டிகளை வென்று தர வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அதை ஒருவர் சிறப்பாக செய்தால் நிச்சயமாக அவர் நல்ல பார்முக்கு திரும்பியுள்ளார் என்று அர்த்தம். அந்த வகையில் பெங்களூரு அணியில் விளையாடிய இதர வீரர்களைக் காட்டிலும் தினேஷ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்”

- Advertisement -

“விராட் கோலிக்கு இந்த வருடம் சுமாராக அமைந்த நிலையில் கிளன் மேக்ஸ்வெல் சிறப்பாக மட்டுமே தொடங்கினார். டு பிளேஸிசும் தடுமாறினார். ஆனால் தினேஷ் கார்த்திக் தொடர் முழுவதும் பெங்களூருவுக்காக மிகச் சிறப்பாக விளையாடினார். எனவே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படாமல் போனால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் அப்படி செய்ததில் என்ன தப்பு இருக்கு? அவர் ஒரு நல்ல கேப்டன் தான் – கிரேம் ஸ்மித் ஆதரவு

ஒருவேளை இந்தத் தொடரில் தினேஷ் கார்த்திக்க்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் இம்மாத இறுதியில் அயர்லாந்துக்கு எதிராகவும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராகவும் இந்தியா 2 டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் உறுதியாக டி20 உலக கோப்பையில் அவர் தேர்வாவதற்கு 100% வாய்ப்புகள் உள்ளது என்றே கூறலாம்.

Advertisement