ஐபிஎல் தொடரில் கலக்கும் சிறந்த விக்கெட் கீப்பர்கள்..! – தரவரிசையில் டாப் தெரியுமா..!

- Advertisement -

தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் 11 வது சீசனில் பல இளம் வீரர்கள் கலக்கி வருகின்றனர். இதில் பல அணிகளில் உள்ள விக்கெட் கீப்பர்கள் தங்களது அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு சில வீரர்கள் கீப்பிங்கையும் சேர்த்து சிறப்பான பேட்ஸ்மேன்களாகவும் இருந்து வருகிறார்கள். இந்த ஐபிஎல் தொடரில் ஆடிவரும் ஒரு சில சிறப்பான கீப்பர்களின் பட்டியல் இதோ.

- Advertisement -

எம்.எஸ் தோனி :
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி குறித்து நாம் சொல்லத்தேவையில்லை. தற்போது சென்னை அணியில் விளையாடி வரும் தோனி இதுவரை இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 393 ரன்களை குவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரரும் தோனி தான். இதுவரை இந்த தொடரில் 6 கேட்ச் மற்றும் 2 ஸ்டம்ப்பிங்கை செய்துள்ளார் தோனி.

தினேஷ் கார்த்திக்:
கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக், இந்திய அணியிலும் கீப்பராக இருந்திருக்கிறார். தோனிக்கு முன்னாள் இந்திய ஆணியில் கீப்பராக செயலாற்றி வந்த இவருக்கு கீப்பிங்கில் சற்று அனுபவம் அதிகம் தான். இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள இவர் தோனிக்கு நிகராக 6 கேட்ச் மற்றும் 2 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

karthik

ஜோஸ் பட்லர்:
ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர். நேற்று(மே 12) சென்னைக்கு எதிரான போட்டியில் 60 பந்திகளில் 95 ரன்களை குவித்து அசத்தினார். பேட்டிங்கில் அசத்திவருவது மட்டுமல்லாமல் இதுவரை இந்த ஐ.பி.எல் தொடரில் இவர் விளையாடிய போட்டிகளில் 9 கேட்ச்கள் மற்றும் 1 ஸ்டம்பிங்கை செய்துள்ளார்.

குவின்டன் டிகாக்:
பெங்களூரு அணியில் விளையாடி வரும் இந்த தென்னாபிரிக்க வீரர், 8 ஆட்டங்களில் 201 ரன்களை அடித்துள்ளார் மேலும், இந்த தொடரில் அனைத்து விக்கெட் கீப்பர்களை விட மிக அற்புதமாக செயல்பட்டு வரும் இவர் இதுவரை இந்த தொடரில் 7 கேட்சுகள் மாற்ரும் 3 ஸ்டம்ப்பிங்கள் என்று கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

கே எல் ராகுல்:
பஞ்சாப் அணியின் இளம் வீரரான இவர், சிறப்பான விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் 6 கேட்ச், 1 ஸ்டம்பிங் செய்துள்ளார். மேலும் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி வரும் ராகுல் பஞ்சாப் அணிக்காக 471 ரன்களை குவித்துள்ளார்.

Advertisement