ஐ.சி.சி உலககோப்பைகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் – டாப் 5 லிஸ்ட் இதோ

Keeper
- Advertisement -

2019 உலகக்கோப்பை முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. எப்போதும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விக்கெட் கீப்பர்களின் பங்கு அமையும். அந்த வகையில் உலக கோப்பை தொடர்களில் விக்கெட் கீப்பர்கள் பெரும்பங்கு ஆற்றுவார்கள். அப்படி பங்காற்றிய 5 விக்கெட் கீப்பர்களை தற்போது பார்ப்போம்.

Sanga

- Advertisement -

குமார் சங்ககாரா – 54 டிஸ்மிஸ்ஸல்ஸ் :

இலங்கை அணியின் விக்கெட் கீப்பராக இவர் உலக கோப்பை தொடர்களில் மட்டும் 54 விக்கெட்டுகள் வீழ்வதற்கு ஒரு கீப்பராக காரணமாக இருந்துள்ளார். 36 போட்டிகளில் விளையாடி தலைவர் 54 விக்கெட்டுகளை காரணமாக இருந்துள்ளார் . 2007ம் ஆண்டு உலகக் கோப்பையில் மட்டும் 15 விக்கெட்டுகள் வீழ்வதற்கு காரணமாக இருந்துள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டிலிருந்து உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.

ஆடம் கில்கிரிஸ்ட் – 35 டிஸ்மிஸ்ஸல்ஸ் :

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக வலம் வந்தவர். ஒருகாலத்தில் விக்கெட் கீப்பர் என்ற பெயர்தான் ஒலிக்கும். அந்த அளவிற்கு மிகச் சிறந்தவராக இருந்தவர். 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வென்றபோது 10 போட்டிகளில் விளையாடி 21 டிஸ்மிஸ் செய்து இருந்தார். மொத்தம் மூன்று உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி 35 டிஸ்மிஸ்ஸல்ஸ் செய்திருக்கிறார்.

Dhoni

மகேந்திர சிங் தோனி – 32 டிஸ்மிஸ்ஸல்ஸ் :

- Advertisement -

இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க விக்கெட் கீப்பர். 2007, 2011, 2015 மற்றும் 2019 ஆகிய நான்கு உலக கோப்பை தொடர்களில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி காரணமாக இருந்துள்ளார். 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மட்டும் இவர் 15 டிஸ்மிஸ்ஸல்ஸ் செய்திருக்கிறார்.

Mccullum

பிரண்டன் மெக்கல்லம் – 32 டிஸ்மிஸ்ஸல்ஸ் :

- Advertisement -

இவர் கேப்டனாக மாறுவதற்கு முன்னர் விக்கெட் கீப்பர் பணியை திறம்பட செய்து வந்தார் மொத்தம் 4 உலக கோப்பை தொடர்களில் விளையாடி 32 டிஸ்மிஸ்ஸல்ஸ் செய்திருக்கிறார்.

Boucher

மார்க் பவுச்சர் – 31 டிஸ்மிஸ்ஸல்ஸ் :

கில்கிறிஸ்ட் காலகட்டத்தில் இவருக்கும் அவருக்கும் தான் மிகப் பெரிய போட்டியாக இருக்கும் . இவர் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் தான் டெஸ்ட் போட்டிகளில் 555 டிஸ்மிஸ்ஸல்ஸ் செய்து அபார சாதனை படைத்திருக்கிறார். இவர் 25 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி 31 டிஸ்மிஸ்ஸல் செய்திருக்கிறார்.

Advertisement