எனக்கு அதுவே போதும்.. தகுதியான லாராவின் 400 ரன்ஸ் உலக சாதனையை உடைக்காதது ஏன்? முல்தர் பேட்டி

- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி ஜூலை 6ஆம் தேதி புலவாயோ நகரில் இருக்கும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மீண்டும் ஜிம்பாப்வே அணியை அடித்து நொறுக்கி 626/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே முச்சதத்தை அடித்த வியான் முல்தர் 367* ரன்கள் குவித்தார். அவருடன் டேவிட் பேடிங்கம் 82, ட்ரே பிரிட்டோரிஸ் 78 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

தவறிய உலக சாதனை:

அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணியை சிறப்பாக பவுலிங் செய்த தென்னாப்பிரிக்கா 170 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 83* ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சுப்ராயேன் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 456 ரன்கள் பின்னிலை ஜிம்பாப்வே அணிக்கி தென்னாப்பிரிக்கா ஃபாலோ ஆன் கொடுத்தது. அதனால் மீண்டும் பேட்டிங் செய்யும் ஜிம்பாப்வே 2வது நாள் முடிவில் 51/1 என தடுமாறி வருகிறது.

முன்னதாக இப்போட்டியில் அபாரமாக விளையாடிய முல்தார் 400 ரன்கள் அடித்து பிரைன் லாராவின் சாதனையை உடைப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது திடீரென ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அவர் அறிவித்தது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் குவித்த கேப்டன், வெளிநாட்டு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர், அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த தென்னாப்பிரிக்க வீரர் போன்ற சாதனைகளே தமக்கு போதும் என்று முல்தர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தகுதியான லாரா:

அதனால் பிரையன் லாரா மீதிருக்கும் மரியாதை காரணமாக 400 ரன்கள் உலக சாதனையை உடைக்கவில்லை என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடத் துவங்கிய போது நான் போதுமானவனாக இல்லை. ஓய்வு பெற்ற வீரர்களிடம் கற்றுக்கொண்டு என்னுடைய ஆட்டத்தை முன்னேற்ற அவர்கள் நிறைய வாய்ப்புக் கொடுத்தனர். இங்கிலாந்துக்கு சென்று விளையாடியது என்னுடைய டெக்னிக்கல் ஆட்டத்தை முன்னேற்றி எப்படிப்பட்ட கிரிக்கெட்டராக வரவேண்டும் என்பதை தெரிய உதவியது”

“ஜிம்பாப்வே பயிற்சியாளர் ஜஸ்டின் சிம்மன்ஸ் என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றி ஷார்ட் பந்துகளுக்கு எதிராக அசத்த உதவினார். உணவு இடைவெளியில் 277 அறிமுகக் கேப்டனின் அதிகபட்ச ஸ்கோர் என்று சிலர் என்னிடம் சொன்னார்கள். பின்னர் அம்லாவின் சாதனையை உடைத்ததை 312 ரன்னில் அறிந்தேன். டிக்ளேர் செய்ய காரணம் என்னவெனில் முதலில் இப்போட்டியை வெல்ல நாங்கள் பவிலிங் செய்ய வேண்டும்”

இதையும் படிங்க: என் சாதனையுடன் சேர்த்து.. ப்ராட்மேனின் இந்த சாதனையையும் கில் உடைக்கனும்.. கவாஸ்கர் விருப்பம்

“2வதாக பிரைன் லாரா ஒரு ஜாம்பவான். அவரைப் போன்ற ஒருவர் அந்த ரெக்கார்டை வைத்திருக்கத் தகுதியானவர். அந்த வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைத்தாலும் நான் இதையே செய்வேன். எங்கள் பயிற்சியாளர் சுக்ரியிடம் இதைப் பற்றி பேசினேன். அவரும் அதையே உணர்ந்தார். பிரைன் லாரா ஜாம்பவான், அவர் அந்த உலக சாதனையை வைத்திருக்க தகுதியானவர்” என்று கூறினார்.

Advertisement