- Advertisement -
உலக கிரிக்கெட்

ஏன் 400 ரன்ஸ் சாதனையை உடைக்கலன்னு? கேட்ட லாரா இதை செய்ய வாழ்த்தினாரு.. முல்தர் பேட்டி

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற கையோடு ஜிம்பாப்வே நாட்டில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை ஒயிட் வாஸ் செய்த தென்னாப்பிரிக்கா வெற்றி எளிதாக பெற்றது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் தற்காலிக கேப்டனாக களமிறங்கிய வியான் முல்தர் ஜிம்பாப்வே அணியை அடித்து நொறுக்கி 367* ரன்கள் குவித்தார். அப்போது அவர் 400* ரன்கள் அடித்து பிரைன் லாராவின் உலக சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது திடீரென தங்களுடைய ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்த முதல் உலக சாதனைப் படைக்கும் வாய்ப்பை தவற விட்டார்.

- Advertisement -

தவற விட்ட முல்தர்:

அது பற்றி கேட்டதற்கு தென்னாப்பிரிக்காவுக்காக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற சாதனையே தமக்கு போதும் என்று முல்தர் சொன்னார். எனவே 400 ரன்கள் சாதனை கிரிக்கெட்டின் ஜாம்பவானான பிரைன் லாராவிடம் இருப்பதற்கே தகுதியானது என்றும் அவர் கூறினார். ஒருவேளை மீண்டும் தமக்கு 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதையே செய்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அவருடைய இந்த முடிவு பெரும்பாலானவர்களிடம் ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. அது போன்ற பொன்னான வாய்ப்பை முல்தர் தவற விட்டிருக்கக்கூடாது என்று கிறிஸ் கெய்ல், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் அந்த உலக சாதனையை ஏன் உடைக்காமல் விட்டீர்கள்? என்று ப்ரைன் லாரா தம்மிடம் கேட்டதாக முல்தர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

முல்தர் கருத்து:

அடுத்த முறை அந்த சாதனையை உடைக்க லாரா வாழ்த்தியதாக தெரிவிக்கும் முல்தர் இப்போதும் தம்முடைய முடிவு சரியென்று கருதுவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது விஷயங்கள் கொஞ்சம் செட்டிலாகியுள்ளன. பிரைன் லாராவிடம் நான் கொஞ்சம் பேசினேன். அப்போது உங்களுடைய சொந்த மரபை உருவாக்கி வரும் நீங்கள் அந்த சாதனையை உடைத்திருக்க வேண்டும் என்று லாரா சொன்னார்”

இதையும் படிங்க: 87/5 டூ 88க்கு ஆல் அவுட்.. 5 பந்தில் 5 விக்கெட்ஸ்.. ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் அயர்லாந்து வீரர் உலக சாதனை

“சாதனைகள் உடைக்கப்படுவதற்காக படைக்கப்படுவதாக தெரிவித்த லாரா வாய்ப்பு கிடைத்தால் அடுத்த முறை சாதனையை உடைக்குமாறு வாழ்த்தினார். அதையும் (400) தாண்டி நிறைய ரன்கள் அடியுங்கள் என்றும் லாரா சொன்னார். லாராவின் பார்வையிலிருந்து அது சுவாரசியமான கருத்து. ஆனால் இப்போதும் நான் சரியானதை செய்ததாகவே நம்புகிறேன். இந்த விளையாட்டை மதிப்பது எனக்கு முக்கியமானது” என்று கூறினார்.

- Advertisement -