டாஸ் போட்ட சில நிமிடங்களில் நிறுத்தப்பட்ட போட்டி. அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் – என்ன ஆனது ?

Wi-vsAus
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஆனது அண்மையில் அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்து கொண்டு விளையாடியது. இந்த தொடரில் 4 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த ஒருநாள் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எட்ட முடியாமல் 123 ரன்கள் மட்டுமே குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று அதிகாலை 12 மணி அளவில் துவங்கியது.

இந்த போட்டிக்கான கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்டு மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி ஆகியோர் டாஸ் நிகழ்வில் கலந்துகொண்டனர். அதன்பிறகு டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலெக்ஸ் கேரி முதலில் தாங்கள் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகி கொண்டிருக்கும் போது திடீரென போட்டி ஒருப்பந்து கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்டது.

Starc

அதுமட்டுமின்றி வீரர்கள் அனைவரும் தங்களது ஹோட்டல் அறைக்கு விரைவாக அனுப்பப்பட்டனர். மேலும் இந்த போட்டி கைவிடப்பட்டது என்ற தகவல் வெளியானது. இதற்கு காரணம் யாதெனில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதுதான். மேலும் கொரோனா தொற்று அணி வீரர்களுக்கு இடையே பரவக் கூடாது என்ற காரணத்திற்காக போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டு இரு அணி வீரர்களும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

walsh

மேலும் பரிசோதனை எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வந்த பின்னரே மீண்டும் போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ஹோட்டல் அறைக்கு சென்று உள்ள அனைத்து வீரர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் என்றும் அந்த பரிசோதனையின் முடிவில் கொரோனா உறுதியாகாத பட்சத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் இரு அணி வீரர்கள் விளையாடுவார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement