- Advertisement -
உலக கிரிக்கெட்

180க்கு ஆல் அவுட்.. வெ.இ மண்ணில் ஆஸ்திரேலியா பரிதாப சாதனை.. பதிலடி கொடுக்கும் ஆஸி

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு முதலாவதாக 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 25ஆம் தேதி பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு சாம் கோன்ஸ்டஸ் 3, கேமரூன் க்ரீன் 3, ஜோஸ் இங்லிஷ் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 22/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு மறுபுறம் ஆமையைப் போல் விளையாடிய உஸ்மான் கவாஜா போராடி 47 (128) ரன்கள் அடித்து அசத்தினார்.

- Advertisement -

180க்கு ஆல் அவுட்:

அவருடன் சேர்ந்து விளையாடிய இந்தியாவின் தொல்லை நாயகன் டிராவிஸ் ஹெட் அரை சதத்தை அடித்து 59 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரைத் தவிர்த்து வெப்ஸ்டர் 11, அலெக்ஸ் கேரி 8, ஸ்டார்க் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். இறுதியில் கேப்டன் பட் கமின்ஸ் அதிரடியாக 28 (18) ரன்கள் எடுத்தப் போதிலும் ஆஸ்திரேலியா 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த போட்டியில் குறைந்தபட்ச இலக்கை பதிவு செய்து ஆஸ்திரேலியா பரிதாப சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2012ஆம் ஆண்டு ஃட்ரினிடாடில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோர்.

- Advertisement -

திருப்பி அடிக்கும் ஆஸ்திரேலியா:

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜெய்டேன் சீல்ஸ் 5, சமர் ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக பேட்டிங் செய்யும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் ஆஸ்திரேலியா சிறப்பாக பௌலிங் செய்தது. குறிப்பாக ப்ரத்வெய்ட் 4, ஜான் கேம்ப்பல் 7 என ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை மிட்சேல் ஸ்டார்க் ஒற்றை இலக்கத்தில் காலி செய்தார்.

இதையும் படிங்க: வெறும் 1.5 பவுலரை வெச்சு போராடிய சுப்மன் கில்.. அவரை விட நல்லாவே கேப்டன்ஷிப் பண்ணாரு.. கைப் பாராட்டு

அடுத்து வந்த கேசி கார்ட்டி நங்கூரமாக விளையாட முயற்சித்த போது 20 ரன்னில் கேப்டன் கமின்ஸ் வேகத்தில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த ஜோமல் வேரிக்கன் டக் அவுட்டானதால் முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் 57/4 என திணறுகிறது. இன்னும் 123 ரன்கள் பின்தங்கியுள்ள அந்த அணிக்கு களத்தில் ப்ரண்டன் கிங் 20*, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 1* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -