போட்டியே வேணாம் நிறுத்துங்க என்று கதறிய மே.இ வீரர்கள் – மறுத்த அம்பயர்கள்

Wi-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவில் விளையாடி வருகிறது. இந்த தொடர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

Wi vs Afg

- Advertisement -

இந்நிலையில் நேற்று அதே மைதானத்தில் இரண்டாவது போட்டி துவங்கியது. இந்த போட்டியில் பங்கேற்ற வீரர்கள் ஹோல்டர், பூரான் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் முக கவசம் அணிந்த படி போட்டியில் விளையாடினர். அவர்கள் முக கவசம் அணிய காரணம் யாதெனில் டெல்லியை போன்று தற்போது லக்னோவிலும் கடுமையான காற்று காற்று மாசுபாடு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் முகமூடி அணிந்து போட்டியில் விளையாடி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் போட்டியை சிறிது நேரம் நிறுத்தி மீண்டும் துவங்குமாறு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நடுவரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு காரணம் யாதெனில் ஆட்டத்தின் போது காற்று மாசுபாடு அதிகரித்தும், கருப்பு நிற பூச்சிகள் மைதானத்தில் குவிந்து வீரர்களை தொந்தரவு செய்தன. இதனால் போட்டி நிறுத்துமாறு வீரர்கள் அம்பயர்களிடம் கூறினர். ஆனால் அம்பயர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் நீங்கள் விளையாட வேண்டும் என்று அவர்கள் கூறி விட்டனர்.

Wi

இருப்பினும் அந்த போட்டியை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் 247 ரன்கள் குவித்தது அந்த அணியின் பூரான் 67 ரன்களும் லீவிஸ் 54 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் இரண்டாவதாக களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 45.4 அவர்களின் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதன் மூலம் அந்த அணி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement