ஒரு காலத்தில் உலக சாம்பியன். ஆனால் இப்போ 5 வருஷம் காத்திருந்து ஒரு வெற்றி – மே.இ அணியின் சோகக்கதை

Wi-3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவில் விளையாடி வருகிறது. இந்த தொடர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று அதே மைதானத்தில் இரண்டாவது போட்டி நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் விளையாடி 247 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பூரான் 67 ரன்களும் லீவிஸ் 54 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் இரண்டாவதாக களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 45.4 அவர்களின் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதன் மூலம் அந்த அணி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் பல முன்னணி வீரர்களுடன் அசைக்கமுடியாத அசுர பலத்துடன் கிரிக்கெட் உலகில் தங்களது ஆட்சியினை நடத்திவந்த மேற்கிந்திய தீவுகள் அணி கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசைக்க முடியாமல் வலம்வந்தது. அதன் பின்னர் தற்போது கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வந்தது.

Wi-2

கடந்த 5 வருடங்களில் மேற்கு இந்திய தீவுகள் அணி பெற்ற முதல் ஒருநாள் தொடர் வெற்றி இதுவே ஆகும். ஒருகாலத்தில் உலகசாம்பியனாக இருந்த அந்த அணி தற்போது ஒரு தொடரில் வெற்றி பெறுவதற்கே 5 வருடங்கள் ஆனது ரசிகர்கள் இடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement