இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் உலகநாடுகளை எச்சரிக்கும் விதமாக களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ் – விவரம் இதோ

Holder
- Advertisement -

உலகம் முழுவதும் நிறம், சாதி, மதம் என அனைத்தையும் வைத்து பாகுபாடு காட்டும் செயல் தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிரான போராட்டமும் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு தற்போது வரை போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

wivseng

- Advertisement -

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் ‘Black Lives Matter’ என்ற வாசகம் பெரும் பிரபலமானது. ஒவ்வொரு தளத்திலும் இந்த ‘Black Lives Matter’ வாசகம் குரலாக எழுப்பப்பட்டு இனவாதத்திற்கு எதிராக எதிர்ப்பு பதியப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை எட்டாம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்களது ஜெஸ்ஸியின் கழுத்து பட்டையில் ‘Black Lives Matter’ என்ற வாசகத்தை பொறித்து விளையாட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாக ஜாசன் ஹோல்டர் கூறியதாவது.. இனவாதத்திற்கு எதிராக எங்களது குரல் எப்போதும் ஒன்றுபட்டு ஒலிக்கிறது. இந்த பிரச்சனை எங்களுக்கு பிரச்சனை அல்ல. இது எங்களது கடமை.நாங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படும் என்று நினைக்கிறோம்.

Holder

இதனைத் தொடர்ந்து நீதியை நிலைநாட்டுவதற்கும் சமத்துவத்திற்கு ஆதரவாகவும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராடுவோம். நாங்கள் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் ஜேசன் ஹோல்டர்.

Wi-3

கரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பிற்கு பிறகு நடக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும் ஜூலை 8-ஆம் தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை 3 டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்னர் இங்கிலாந்து சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement