- Advertisement -
உலக கிரிக்கெட்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிகழ்த்திய அரிதான சாதனை – விவரம் இதோ

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று டாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக சௌமியா சர்க்கார் 45 ரன்களையும், ரிஷாத் ஹுசைன் 39 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் 50 ஓவர்களின் முடிவு 9 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்ததால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று அந்த சூப்பர் ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நடைபெறாத ஒரு அரிதான நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதாவது நேற்றைய போட்டி நடைபெற்ற டாக்கா மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததை கணித்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வித்தியாசமான யுக்தியை கையில் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக ரோஸ்டன் சேஸ், அகில் ஹுசைன், கரி பைரி, குடகேஷ் மோட்டி, அதனாஸ் என்கிற ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களுடன் 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசியிருந்தனர். இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ்சின் அனைத்து ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசிய அரிதான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : 11 இடத்தையும் பார்த்த சகலகலா வல்லவன்.. கேஎல் ராகுலை இதுக்குன்னே பாராட்டனும்.. கிளன் மெக்ராத்

தற்போது வரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று சமநிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -