11 இடத்தையும் பார்த்த சகலகலா வல்லவன்.. கேஎல் ராகுலை இதுக்குன்னே பாராட்டனும்.. கிளன் மெக்ராத்

Glenn McGrath
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. பெர்த் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டி மழையால் இருதரப்புக்கும் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்த 26 ஓவர்களில் இந்தியா 136/9 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு காரணமானது.

முன்னதாக அந்தப் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா 7 மாதங்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடினார்கள். அந்த வாய்ப்பில் ரோஹித் சர்மா 8, விராட் கோலி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். போதாக்குறைக்கு கேப்டன் கில், ஸ்ரேயாஸ் ஐயரும் பெரிய ரன்கள் எடுக்கவில்லை.

- Advertisement -

சகலகலா வல்லவன்:

அதனால் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேஎல் ராகுல் அடுத்தடுத்த 2 சிக்ஸர்களை பறக்க விட்டு அதிரடியாக 38 (31) ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் போட்டிமிக்க இந்திய அணியில் கேஎல் ராகுல் கிட்டத்தட்ட 11 இடங்களிலும் பேட்டிங் செய்து விட்டதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார். பொதுவாக வெவ்வேறு இடங்களில் விளையாடினால் உங்களுடைய தன்னம்பிக்கை பாழாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் தமக்கு கொடுக்கப்படும் அனைத்து இடங்களிலும் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடுவதாக அவர் பாராட்டியுள்ளார். அப்படி கொடுக்கும் அனைத்து இடங்களிலும் சகலகலா வல்லவனாக தன்னம்பிக்கை குறையாமல் அசத்தும் ராகுல் பற்றி மெக்ராத் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி ராகுலை சுற்றி நகர்த்துகிறார்கள்”

- Advertisement -

மெக்ராத் பாராட்டு:

“ஒரு கட்டத்தில் அவர் கிட்டத்தட்ட அனைத்து 11 இடங்களிலும் பேட்டிங் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். பல்வேறு இடங்களில் விளையாடுவதற்காக அவர் தன்னை மாற்றிக் கொள்வது கடினமாக இருக்கும். ஆனால் அவர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட பேட்ஸ்மேன். முதல் போட்டியில் கடினமான சூழ்நிலைகளில் அவர் இந்தியாவுக்காக டாப் ஸ்கோர் அடித்தார்”

இதையும் படிங்க: 2 ஒய்ட், 1 நோபால்.. வெ.இ சூப்பர் ஓவரில் திரில் வெற்றி.. வரலாற்றின் முதல் முயற்சியில் சோக் செய்த வங்கதேசம்

“இதுவரை அவர் ஓப்பனிங் முதல் கீழே வரை விளையாடியுள்ளார். எந்தளவுக்கு அவர் கீழே பேட்டிங் செய்துள்ளார் என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும் அப்படி மாறிமாறி விளையாடுவது உங்களுடைய தன்னம்பிக்கையைப் பாழாக்கலாம். ஆனால் ராகுலை பொறுத்த வரை அதற்கெல்லாம் பழகி தன்னை மாற்றிக் கொள்கிறார். இது போக அவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படுகிறார். எனவே அவர் பன்முகத்தன்மை கொண்ட வீரர்” என்று பாராட்டினார்.

Advertisement