412 சிக்ஸ்.. வெறும் 10.5 ஓவரில் அமெரிக்காவை நொறுக்கிய வெ.இ.. கிறிஸ் கெயிலை முந்தி பூரான் புதிய உலக சாதனை

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 22ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு பார்படாஸ் நகரில் 46வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்கா ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களின் நேர்த்தியான பந்து வீச்சில் திணறலாக விளையாடி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆண்ட்ரீஸ் கவுஸ் 29, நிதீஷ் குமார் 26 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 3, ராஸ்டன் சேஸ் 3, அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

412 சிக்ஸர்கள்:
அதைத்தொடர்ந்து 129 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் தடுமாறி 15 (14) ரன்களில் ஹர்மீத் சிங் அவுட்டானார். ஆனால் அவருக்கும் சேர்த்து எதிர்ப்புறம் அமெரிக்க பவுலர்களை அடித்து நொறுக்கிய சாய் ஹோப் வேகமாக ரன்கள் சேர்த்தார். அந்த வகையில் அரை சதம் கடந்த அவர் 4 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்டு 82* (39) ரன்கள் குவித்தார்.

அவருடன் இணைந்து விளையாடிய நிக்கோலஸ் பூரான் தன்னுடைய பங்கிற்கு ஒரு பவுண்டரி 3 சிக்ஸருடன் 27* (12) ரன்கள் குவித்தார். அதனால் 10.6 ஓவரிலேயே 130/1 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது. இப்போட்டியில் அடித்த 3 சிக்ஸர்களையும் சேர்த்து இந்த உலகக் கோப்பையில் நிக்கோலஸ் பூரான் மொத்தம் 17* சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2012 டி20 உலகக் கோப்பையில் கிறிஸ் கெயில் 16 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக இந்த வருடம் அனைத்து அணிகளும் சேர்ந்து மொத்தம் இதுவரை 412* சிக்சர்கள் பறக்க விட்டுள்ளன. அதன் வாயிலாக வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பையாக 2024 தொடர் சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: டைம் மெஷின் கிடைச்சா.. யாரோ ஒருத்தரான தோனியை செய்ய விடாம நானே செஞ்சுருப்பேன்.. கம்பீர் வருத்தம்

இதற்கு முன் 2021 டி20 உலகக் கோப்பையில் 405 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் முதல் வெற்றியை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய கடைசிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தால் செமி ஃபைனல் செல்லலாம் என்ற நல்ல நிலைக்கு வந்துள்ளது. மறுபுறம் போராடாமலேயே தோற்ற அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

Advertisement