வெஸ்ட் இண்டீஸ் 97/5.. வெறும் 136 ரன்ஸ் வைத்து ஆட்டம் காட்டிய பப்புவா அணி.. ரசிகர்கள் பாராட்டு

WI vs PNG
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஜூன் இரண்டாம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸில் உள்ள கயானா நகரில் இரண்டாவது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூகினியா கிரிக்கெட் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பப்புவா அணி மிகவும் தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் போராடி 136/8 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு டோனி உரா 2, லெகா சியாகா 1, ஹிரி ஹிரி 2, சார்லஸ் அமினி 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதிகபட்சமாக சேஸ் பவ் 50 (43) கேப்டன் அசாத் வாலா 21 கிப்லின் டோங்கா 27 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

போராடிய வெஸ்ட் இண்டீஸ்:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா 2 விக்கெட்கள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் 137 ரன்களை எளிதாக துரத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே ஜான்சன் சார்லஸ் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்தால் நிக்கோலஸ் பூரான் மற்றும் பிரண்டன் கிங் ஆகியோர் நிதானமாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இருப்பினும் மெதுவாக விளையாடிய இந்த ஜோடியில் நிக்கோலஸ் பூரான் 27 (27) ரன்னில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே ப்ரிண்டன் கிங் 34 (29) ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தை சமாளிப்பதற்காக அடுத்ததாக வந்த ராஸ்டான் சேஸ் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் ரோவ்மன் போவலும் 15 (14) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அதற்கடுத்ததாக வந்த ரூத்தர்போர்ட் 2 (7) ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை அதிகரித்து விட்டு சென்றார். அதனால் 97/5 என சரிந்த வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை சந்திப்பதற்கான சூழல் ஏற்பட்டது. ஆனால் அப்போது வந்த ஆண்ட்ரே ரசல் அதிரடியாக 15* (9) ரன்கள் அடித்தார். இறுதியில் எதிர்புறம் உத்வேகமடைந்த ராஸ்டன் சேஸ் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி 42* (27) ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க: பேருக்கு தான் அமெரிக்கா.. எதுவும் சரில்ல.. இந்திய வீரர்களை எச்சரித்த டிராவிட்.. காரணம் என்ன?

அதனால் 19 ஓவரில் 137/5 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. மறுபுறம் முடிந்தளவுக்கு சவாலை கொடுத்த பப்புவா நியூகினியா அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் அசாத் வாலா 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் வலுவான வெஸ்ட் இண்டீஸ்க்கு அதன் சொந்த மண்ணில் அந்த அணி 19 ஓவர்கள் வரை சவாலை கொடுத்தது ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றது.

Advertisement