வெறும் 7 ரன்ஸ்.. வெற்றிக்கு போராடிய சான்ட்னர்.. நியூஸிலாந்தில் 17 வருடம் கழித்து வெ.இ சாதனை வெற்றி

Mitchell Santner
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் முதல் போட்டி நவம்பர் 5ஆம் தேதி இந்திய நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் போராடி 164/6 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் சாய் ஹோப் அரை சதத்தை அடித்து 53 (39) ரன்கள் அடித்தார். அவருடன் ரோஸ்டன் சேஸ் 33 (23), ரோவ்மன் போவெல் 28 (27) ரன்கள் அடித்து கை கொடுத்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜக்காரி போல்க்ஸ், ஜேக்கப் டுபி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

போராடிய சான்ட்னர்:

அடுத்து விளையாடிய நியூஸிலாந்துக்கு டேவோன் கான்வே தடுமாற்றமாக விளையாடி 13 (12) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த டிம் ராபின்சன் 27 (21) ரன்களில் செபார்ட் வேகத்தில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் ரச்சின் ரவீந்திரா 21, மார்க் சேப்மன் 7, டேரில் மிட்சேல் 13, மைக்கேல் பிரேஸ்வெல் 1, ஜேம்ஸ் நீசம் 11 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

அதனால் 107/9 என சரிந்த நியூசிலாந்து தோல்வியின் பிடியில் சிக்கியதுடன் 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்துடன் கேப்டன் மிட்சேல் சான்ட்னர் அதிரடியாக விளையாடினார். எதிர்ப்புறம் இருந்த ஜேக்கப் டுபிக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்காத அவர் ஓவரின் கடைசி பந்துகளில் சிங்கிள் எடுத்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

2008க்குப்பின் வெற்றி:

அவருடைய அதிரடியால் வெற்றியை நெருங்கிய நியூசிலாந்துக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 12 ரன்கள் அடித்த சான்ட்னர் மொத்தம் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 55* (28) ரன்கள் குவித்தார். இருப்பினும் 20 ஓவரில் நியூசிலாந்தை 157/9 ரன்களுக்கு சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

இதையும் படிங்க: நாளைய 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 17 வருடங்கள் கழித்து நியூசிலாந்து மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி பெற்றது. கடைசியாக 2008ஆம் ஆண்டு இதே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருந்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 3, ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். மறுபுறம் கேப்டன் சான்ட்னர் வெறித்தனமாக போராடியும் நியூசிலாந்து தோற்றது.

Advertisement