வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் வங்கதேசம் சமன் செய்தது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வென்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில்இத்தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 12ஆம் தேதி செயின்ட் கிட்ஸ் நகரில் நடைபெற்றது.
அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களம் இறங்கிய வங்கதேசம் அபாரமாக விளையாடி 50 ஓவரில் 321-5 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு லிட்டன் தாஸ் 0, டன்சித் ஹசன் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். ஆனால் கேப்டன் மெஹந்தி ஹசன் 77, சௌமியா சர்க்கார் 73 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள்.
வங்கதேசம் அசத்தல்:
மிடில் ஆர்டரில் அனுபவ வீரர் முகமதுல்லா அதிரடியாக 84* (63), ஜாகிர் அலி 62* (57) ரன்கள் அடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தார். பின்னர் 322 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரன்டன் கிங் 15, அலிக் அதனேஷ் 7, கேப்டன் ஷாய் ஹோப் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
அதனால் 31-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு கேசி கார்ட்டி நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை விளையாடினார். அவருடன் சேர்ந்து நிதானமாக விளையாட முயற்சித்த ரூதர்போர்ட் 30 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த அறிமுக வீரர் அமீர் ஜாங்கோ அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
வெ.இ வெற்றி:
அவருடன் சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேசி கார்ட்டி சதத்தை நழுவ விட்டு 95 (88) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ராஸ்டான் சேஸ் 12 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜாங்கோ அதிரடியான சதமடித்து 104* (83) ரன்கள் குடித்தார். இறுதியில் அவருடன் சேர்ந்து குடகேஷ் மோட்டி 44* (31) ரன்கள் எடுத்ததால் 45.5 ஓவரில் 325-6 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: 3 ஆவது டெஸ்ட் போட்டி துவங்கும் முன்னரே அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆஸ்திரேலிய அணி – விவரம் இதோ
அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் வங்கதேசத்தை ஒயிட் வாஸ் செய்து இத்தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜாங்கோ ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் ஜாம்பவான் தேஷ்மென்ட் ஹெய்ன்ஸ்க்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வெ.இ வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன் 1978ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான தேஷ்மென்ட் ஹெய்ன்ஸ் 148 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.