ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதற்கான உண்மையான காரணம் இது தானா? சுரேஷ் ரெய்னா வெளியிட்ட ட்வீட்

Raina 3

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பல சிக்கல்களை சந்தித்து விட்டது. இத்தனை வருடமும் பல சர்ச்சைக்குள் தான் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சர்ச்சை மேல் சர்ச்சையாக சுற்றிக்கொண்டிருக்கிறது. முதலில் துபாய் சென்று இறங்கிய உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 13 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அணி வீரர்கள் மற்றும் வேலையாட்கள் என அனைவரும் இதனால் தனிமைப்படுத்தப் பட்டனர்.

தீபக் மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதியானது. அதன் பின்னர் அடுத்த நாளே சுரேஷ் ரெய்னா திடீரென்று ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இந்தியாவிற்கு செய்வதாக அறிவித்தார். இத்தனை வருடங்கள் ஐபிஎல் தொடரில் பிரமாதமாக விளையாடி மிகச்சிறந்த பெயர்பெற்ற சுரேஷ் ரெய்னா திடீரென்று வேறு எது பலருக்கு ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியது. மேலும் இதற்கு பல காரணங்களும் கடந்த சில நாட்களில் திரிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ஏன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் என்பது குறித்த ஒரு சிறிய செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

Raina-1

அதாவது எனக்கு எனது பிள்ளைகளை தவிர பெரிதாக வேறு எதுவும் கிடையாது. பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நகரத்தில் எனது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை என்னால் மறக்க முடியவில்லை. அதில் என்னுடைய மாமா இறந்துவிட்டார். என்னுடைய அத்தை கவலைக்கிடமாக இருக்கிறார். நானும் எனது குடும்பமும் டெல்லியில் உள்ள வீட்டில் எங்களை தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த மர்ம நபர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சுரேஷ்ரெய்னா

ஒருவேளை இதுதான் தொடரிலிருந்து ரெய்னா வெளியேறியதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -