அக்சர் படேலுக்கு காயம் அது ஓகே.. பும்ரா ஏன் 2 ஆவது போட்டியில் விளையாடல தெரியுமா? – காரணம் இதோ

Bumrah
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ஜனவரி 23-ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நாக்பூர் நகரில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

2 ஆவது போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடாதது ஏன்? :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததும் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

- Advertisement -

அந்தவகையில் நேற்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான டாஸ் போடப்பட்ட பிறகு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இருப்பதாக கேப்டன் சூரியகுமார் யாதவ் அறிவித்தார். அந்த வகையில் அக்சர் பட்டேல் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளதாக கேப்டன் அறிவித்தார்.

இதில் அக்சர் படேல் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியின் போது பந்தினை தடுக்கும் முயற்சியில் கையில் காயம் ஏற்பட்டு வெளியேறியதால் அவர் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதாக கூறப்பட்டது. அதே வேளையில் பும்ரா இந்த இரண்டாவது போட்டியில் விளையாடாததற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலை டாசின் போதே சூரியகுமார் யாதவ் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றம் – பிளேயிங் லெவன் இதோ

அந்த வகையில் இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவருக்கு சில போட்டிகளில் ஓய்வினை வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாகவே இரண்டாவது போட்டியில் அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு பும்ரா மிகவும் முக்கியமான வீரர் என்பதனால் இந்த நியூசிலாந்து தொடரில் அவருக்கு தேவையான ஓய்வை வழங்க இந்திய அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement