பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் ரஜத் பட்டிதார் விளையாடாதது ஏன்? – காரணம் இதோ

Rajat Patidar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் போட்டியானது இன்று தரம்சாலா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் வாய்ப்பை முதல் அணியாக உறுதி செய்யும் முனைப்டன் பெங்களூரு அணி களமிறங்கியுள்ளது.

ரஜத் பட்டிதார் இன்று விளையாடாதது ஏன்? :

அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும் முனைப்புடன் பஞ்சாப் கிங்ஸ் அணி இறங்கியுள்ளது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியின் போது டாஸ் போடுகையில் ரஜத் பட்டிதாருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா வந்தது பலரது மத்தியிலும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதன்மூலம் இன்றைய போட்டியில் ரஜத் பட்டிதார் விளையாடவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா கேப்டனாக விளையாடுகிறார் என்பதும் உறுதியாகியுள்ளது. இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையில் ஆர்.சி.பி அணி சிறப்பாக விளையாடி வந்த வேளையில் இன்றைய போட்டியில் அவர் விளையாடாதது ஏன்? என்ற கேள்வியும் எழுந்தது.

அதற்கு பதிலாக தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி : இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து ஓய்வின்றி விளையாடியவரும் ரஜத் பட்டிதார் பிளே ஆப் சுற்று சுற்று போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் டாசுக்கு பிறகு பேசிய கேப்டன் ஜிதேஷ் சர்மா : ரஜத் பட்டிதார் தற்போது சிறிய ஓய்வு ஒன்றை எடுத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஷான் மார்ஷின் சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை நிகழ்த்திய சாய் சுதர்சன் – விவரம் இதோ

நிச்சயம் அடுத்த போட்டிக்கான ஆர்.சி.பி அணியுடன் அவர் இணைவார் என்றும் உறுதி செய்துள்ளார். இதன்மூலம் இன்றைய போட்டியில் ஓய்வெடுக்கும் அவர் அடுத்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இன்றைய போட்டியில் விளையாடாத ரஜத் பட்டிதாருக்கு பதிலாக சுயாஷ் சர்மா அணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement