90 கிலோ எடை வீரர்…அந்த விஷயத்தில், கோலியை விட நான் தான் பெஸ்ட்..! கோலிக்கு சவால் விடும் ஆப்கான் வீரர் !

mohammed
- Advertisement -

விளையாட்டு வீரர்கள் என்றாலே முதலில் அவர்களது உடல்களை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.ஆனால் தனது உடல் அமைப்புகளையும் மீறி கிரிக்கெட் உலகத்தில் சாதித்த குண்டான வீரர்கள் பலர் உள்ளனர் . உதாரணமாக பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் அக், இலங்கையின் அர்ஜுனன் ரணதுங்கா போன்ற பல வீரர்கள் கிரிக்கெட்டில் சந்தித்துள்ளனர்.

virat

- Advertisement -

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் உலகில் கால் பதித்த ஆப்காஸ்த்தான் வீரரான முகமது ஷேசாத், அந்த அணியின் விக்கெட் கீப்பராகவும்,அதிரடி பேட்ஸ்மேனகாவும் இருந்து வருகிறார்.ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வரும் ஷேசாத், அந்த அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறார்.

90 கிலோ எடையுள்ள இவர் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்ளவதில் பெரும் அக்கறை கொண்டவரெல்லாம் கிடையாது. உணவு பிரியரான இவர் தான் விரும்பும் உணுவுகளை சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறாராம். மேலும் தான் இந்திய வீரர் கோலியை விட மெகா சிஸ்க்சர்களை அடிப்பேன் என்றும் கூறுகிறார் இந்த கொழு கொழு வீரர்.

shahzad

இதுபற்றி சமீபத்தில் இவர் அளித்த போட்டி ஒன்றில் “எனக்கு கோலி போன்று உடலை பிட்டாக வைத்துக் கொள்ளத்தான் ஆசையாக உள்ளது, அதற்கு நான் பல உடற்பயிச்சிகளையும் செய்து வருகிறேன். ஆனால் என்னால் எனது உணவு பழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை அதனால் எனக்கு உடல் எடை கூடிக்கொண்டே போகின்றது. அதனால் என்ன என்னால் கோலியை விட அதிக தூரத்தில் சிக்ஸ் அடிக்க முடியும் “என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் .

Advertisement