நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அக்சர் படேல் இடம்பெறாததுக்கு காரணமே இதுதான் – விவரம் இதோ

Axar Patel
- Advertisement -

அண்மையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன்பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்க இருக்கிறது.

அக்சர் படேல் ஒருநாள் தொடரில் இடம்பெறாதது ஏன்? :

இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இன்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் வெளியான அறிவிப்பில் சுப்மன் கில் மீண்டும் கேப்டனாக அணிக்கு திருப்பியுள்ள வேளையில் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

- Advertisement -

அதேவேளையில் டி20 போட்டியில் துணை கேப்டனாக இருக்கும் அக்சர் பட்டேல் இந்த ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இப்படி டி20 போட்டிகளில் துணை கேப்டனாக இருக்கும் ஒரு முக்கிய ஆல்ரவுண்டரை ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சேர்க்காதது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் அதற்கான சில விளக்கங்களை இந்த பதிவில் நாம் காணலாம். அந்த வகையில் ஏற்கனவே இந்திய ஒருநாள் அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக இருப்பதால் கூடுதல் ஆல்ரவுண்டர் வேண்டாம் என நிர்வாகம் நினைத்திருக்கலாம்.

- Advertisement -

அதேபோன்று கிட்டத்தட்ட ரவிந்திர ஜடேஜாவின் ரோலையே அக்சர் பட்டேல் செய்வார் என்பதனால் பிளேயிங் லெவனில் ஒரே மாதிரியான இரண்டு வீரர்கள் தேவையில்லை என்றும் அவர் சேர்க்கப்படாமல் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் நிர்வாகத்தை பொருத்தவரை இனி அக்சர் பட்டேலை ஒரு டி20 ஸ்பெசலிஸ்ட்டாக மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நியூசி அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்டியா விளையாடாதது ஏன்? – பி.சி.சி.ஐ விளக்கம்

அதன் காரணமாகவே அவருக்கு டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு சில காரணங்களுக்காகவே நிர்வாகம் அக்சர் பட்டேலை ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சேர்க்காமல் இருந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

Advertisement