நியூசி அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்டியா விளையாடாதது ஏன்? – பி.சி.சி.ஐ விளக்கம்

Hardik Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்பதே கடந்த சில நாட்களாக ரசிகர்களின் ஒரு பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்போடு தயாராக இருக்கிறது.

ஹார்டிக் பாண்டியா இடம்பெறாதது ஏன்? : பி.சி.சி.ஐ

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் வெளியான அறிவிப்பில் சுப்மன் கில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

அதேவேளையில் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அவரது உடற்தகுதியை பொறுத்தே விளையாடுவாரா? மாட்டாரா? என்பது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.

ஹார்டிக் பாண்டியா சமீபத்தில் நல்ல ஃபார்மில் இருந்தும், தற்போது விஜய் ஹசாரே தொடரில் அசத்தலாக விளையாடி வருவதாலும் அவர் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காது ஏன்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அதற்கான விளக்கத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அளித்துள்ளது. அந்த வகையில் வெளியான அறிவிப்பின்படி அதில் குறிப்பிடப்பட்டதாவது : தற்போதைக்கு ஹார்டிக் பாண்டியா 10 ஓவர்கள் வீசுவதற்கான உடற்தகுதியை இன்னும் கட்டவில்லை என்பதால் அவரை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிராஜ், ஸ்ரேயாஸ் பேக்.. நியூஸிலாந்து ஒருநாள் தொடருக்காக இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட் இதோ

அதேபோன்று எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டும் அவருக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கலாம் என்றும் நிர்வாகம் நினைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement