இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியில் இடம் பிடித்திருக்கும் 15 வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
திலக் வர்மாவுக்கு மாற்றுவீரர் யார்? :
இதன் காரணமாக இந்த டி20 தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் கடைசி டி20 தொடர் என்பதினால் இந்த தொடர் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் 3 ஆட்டங்களில் திலக் வர்மா விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் விஜய் ஹசாரே தொடரின் போது விளையாடிய அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக யார்? இந்த தொடரில் விளையாடப்போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக நான்காவது இடத்தை நிரப்ப இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதில் ஒருவர் ஷ்ரேயாஸ் ஐயர் : கடந்த 2024 ஐ.பி.எல் தொடரின் போது கொல்கத்தா அணியை மிகச்சிறப்பாக வழி நடத்திய அவர் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரின் போது பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட அவர் இறுதிப்போட்டி வரை அந்த அணியை கொண்டு சென்றார்.
அதுமட்டும் இன்றி அந்த தொடரில் மட்டும் 604 ரன்கள் குவித்து மிரள வைத்திருந்தார். இப்படி மிகச் சிறப்பான பார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு நான்காவது இடம் ஏற்கனவே பழக்கப்பட்ட இடம் என்பதால் அவர் அந்த இடத்திற்கு ஒரு போட்டியாக பார்க்கப்படுகிறார். அதே வேளையில் இரண்டாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் பார்க்கப்படுகிறார்.
இதையும் படிங்க : ஒருநாள் தொடரை தோற்று இருந்தாலும் கம்பீரின் இந்த முடிவை பாராட்டியே ஆகனும் – சடகோபன் ரமேஷ் கருத்து
ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வரும் அவர் சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்கண்ட் அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்று அந்த போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து தனது அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அதுமட்டும் இன்றி விஜய் ஹசாரே தொடரிலும் அவரது ஆட்டம் பிரமாதமாக இருந்ததால் அவர் மற்றொரு போட்டியாக பார்க்கப்படுகிறார். இருப்பினும் இந்த இருவரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



