ஒருநாள் தொடரை தோற்று இருந்தாலும் கம்பீரின் இந்த முடிவை பாராட்டியே ஆகனும் – சடகோபன் ரமேஷ் கருத்து

Sadagopan Ramesh
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கல் பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்திய அணியை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தது.

கம்பீரின் இந்த முடிவை பாராட்டியாக வேண்டும் : சடகோபன் ரமேஷ் கருத்து

அதேவேளையில் சொந்த மண்ணில் இந்திய அணி அடைந்த இந்த தோல்வி பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் இந்த தொடரில் இந்திய அணியின் குறிப்பிட்ட சிலவீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவின் செயல்பாடு மிக திருப்திகரமாக இருந்தது.

- Advertisement -

மேலும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்ஷித் ராணாவை மாற்ற முயற்சித்து வரும் வேளையில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பினை வழங்கிய கௌதம் கம்பீரை பாராட்ட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

நிதீஷ்குமார் ரெட்டி ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றமாக உள்ளே வந்தவுடன் அவருடன் இணைந்து ஹர்ஷித் ராணாவும் தற்போது பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவது இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டுக்கு இன்னும் பலத்தை சேர்க்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. ஹர்ஷித் ராணாவிற்கு நாம் பாராட்டுக்களை தெரிவித்தே ஆக வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் அவர்மீது நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் பயிற்சியாளர் கொடுத்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அவர் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய திறனை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக எட்டாவது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது. அவர் இந்த தொடரில் தனது அற்புதமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தியதன் மூலம் நிச்சயம் இனிவரும் தொடர்களிலும் இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்.

இதையும் படிங்க : முடிவுக்கு வரும் ரவீந்திர ஜடேஜாவின் ஒருநாள் கரியர்.. இந்தூர் போட்டி தான் கடைசி ஆட்டமா? – விவரம் இதோ

அதனால் அவரை தொடர்ச்சியாக பயன்படுத்துவது என்பது மிக சரியான ஒன்று என சடகோபன் ரமேஷ் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய அணியில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றாக்குறை இருந்து வரும் வேளையில் தற்போது ஹர்சித் ராணாவிற்கு புதிய ரோல் கொடுக்கப்பட்டு அதனை அவர் சரியாக செய்து வருவது பலரது மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement