- Advertisement -
கிரிக்கெட் செய்திகள் | Today Cricket news in Tamil

இந்தியாவுடன் செமி ஃபைனலுக்கு வரப்போவது தெ.ஆ’வா – பாகிஸ்தானா? குரூப் 2 முழுமையான அலசல் இதோ

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே வெளியேறியது உட்பட முதல் சுற்றிலிருந்தே ரசிகர்கள் எதிர்பாராத திரில்லர் திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை 90% உறுதி செய்துள்ளது. குறிப்பாக முதல் போட்டியிலேயே பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் தோற்கடித்த இந்தியா நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதனால் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்து ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதன் காரணமாக நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி திரில் வெற்றியை பெற்றது. ஆனால் அப்போட்டியில் 185 ரன்களை துரத்திய இந்தியாவிற்கு எரிமலையாக வெடித்த லிட்டன் தாஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். இருப்பினும் அதிர்ஷ்டமாக மழை வந்ததை பயன்படுத்தி அவரை ராகுல் ரன் செய்த திருப்பு முனையால் வென்ற இந்தியா சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 பிரிவில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் ஜொலிக்கிறது.

- Advertisement -

செமி பைனலில் யார்:
ஆனால் இந்த உலகக்கோப்பையில் ஆரம்பத்திலேயே இந்தியாவிடம் தோற்று கத்துக்குட்டி ஜிம்பாப்வேவிடம் 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் அதற்கடுத்த 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து அரை இறுதிக்குள் நுழைய போராடி வருகிறது. குறிப்பாக நவம்பர் 3ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவை அந்த அணி வீழ்த்தியதால் குரூப் 2 புள்ளி பட்டியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1. இந்நிலையில் தற்சமயத்தில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்தியா செமி ஃபைனலுக்கு செல்ல ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி போட்டியில் சாதாரணமான வெற்றியைப் பெற்றாலே போதுமானது. அதில் என்ன தான் பாகிஸ்தானை ஜிம்பாப்வே தோற்கடித்தாலும் அதன்பின் நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய கத்துக் குட்டிகளிடம் தோற்றது.

- Advertisement -

2. அதன் காரணமாக உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா தன்னுடைய கடைசி போட்டியில் வென்று நிச்சயம் அரையிறுதிக்கு தகுதி பெறுமென 99% இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்பலாம். ஒருவேளை அப்போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் 7 (6+1) புள்ளிகளைப் பெறும் இந்தியா அரையிறுதிக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

3. அதனால் 2வது அணியாக தகுதி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதில் நெதர்லாந்து ஏற்கனவே வெளியேறிய நிலையில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாலும் குறைவான ரன்ரேட் கொண்டுள்ளதால் அரையிறுதிக்கு செல்ல முடியாது.

- Advertisement -

4. அதன் காரணமாக முறையே 5 மற்றும் 4 புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது. அதில் நெதர்லாந்துக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தென்னாபிரிக்கா உள்ளது. ஒருவேளை தென்னாபிரிக்காவுக்கு ராசியில்லாத மழை வந்து அப்போட்டியை ரத்து செய்யும் பட்சத்தில் 6 (5+1) புள்ளிகளை பெற்றாலும் பாகிஸ்தான் அதனுடைய கடைசி போட்டியில் வென்றால் உண்மையாகவே தென்னாப்ரிக்கா அரையிறுதிக்கு செல்ல முடியாது.

4. ஏனெனில் கிட்டத்தட்ட தென்னாபிரிக்காவுக்கு நிகரான ரன்ரேட் கொண்டுள்ள பாகிஸ்தான் தன்னுடைய கடைசி போட்டியில் வங்கதேசத்தை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தென்னாபிரிக்கா அதனுடைய கடைசி போட்டியில் தோற்றாலோ அல்லது மழை வந்து கெடுத்தாலோ பாகிஸ்தான் கணிசமான பெரிய வெற்றியுடன் உள்ளே வந்து விடும்.

- Advertisement -

5. ஆனால் “அதற்கு நாங்கள் என்ன தொம்மையா” என்ற வகையில் மழை வராமல் வேண்டிக் கொள்வதுடன் நெதர்லாந்தை தன்னுடைய கடைசி போட்டியில் நிச்சயம் தோற்கடித்து தென்னாப்பிரிக்கா தகுதி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் தென்னாப்ரிக்கா மட்டுமே இந்த தொடரில் வலுவான இந்தியாவையே தோற்கடித்த ஒரே அணியாக திகழ்கிறது.

இதையும் படிங்க : விராட் கோலியின் ஹோட்டல் ரூம் விவகாரம். ஊழியருக்கு தண்டனை வழங்கி – மன்னிப்பும் கேட்டு வெளியிட்ட அறிக்கை

6. அப்படி இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் தங்களுடைய கடைசி போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் தன்னுடைய கடைசி போட்டியில் வென்றாலும் நேராக வீட்டுக்கு கிளம்ப வேண்டிய நிலைமை ஏற்படும்.

- Advertisement -