- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருவேளை வெளியேறினால்.. இந்தியாவுக்கு பதில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடும் அணி எது? ஐசிசி விதிமுறை

பாகிஸ்தான் மண்ணில் வரும் பிப்ரவரி மார்ச் மாதம் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. கடைசியாக கடந்த 1996 உலகக் கோப்பையின் கணிசமான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது 28 வருடங்கள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தானில் அதுவும் முழுமையாக ஒரு ஐசிசி தொடர் நடைபெற உள்ளது அந்நாட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தத்தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு செல்வதை மொத்தமாக தவிர்த்துள்ள இந்தியா இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் நிறுத்தியுள்ளது. அத்துடன் ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பையில் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதி வருகின்றன.

- Advertisement -

விதிமுறை என்ன:
அந்த சூழ்நிலையில் 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அங்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கை மண்ணில் விளையாடி வெற்றியும் கண்டது. அதே போல இம்முறையும் தங்களுடைய போட்டிகளை பாகிஸ்தானுக்கு வெளியே துபாய் அல்லது இலங்கை மண்ணில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் ஜெய் ஷா ஆசிய கவுன்சில் தலைவராக இருப்பதால் ஆசிய கோப்பையில் இந்தியா நினைத்ததை சாதித்தது. ஆனால் அதே போல ஐசிசியும் இந்தியாவின் பேச்சுக்கு முழுமையாக கட்டுப்படுமா என்பது சந்தேகமாகும். மறுபுறம் 28 வருடங்கள் கழித்து தங்கள் நாட்டில் நடைபெறும் ஐசிசி தொடரின் எந்த போட்டியையும் வெளிநாட்டு மண்ணில் நடத்த பாகிஸ்தான் விரும்பவில்லை.

- Advertisement -

அத்துடன் பாதுகாப்பு அம்சங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கும் பாகிஸ்தான் வேண்டுமானால் இந்தியா தங்களுடைய அனைத்து போட்டிகளையும் பாதுகாப்பான லாகூரில் விளையாடலாம் என்று அறிவித்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஐசிசி எடுக்கும் முடிவே கடைசியாக இருக்கும். ஒருவேளை பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுங்கள் என்று இந்தியாவுக்கு ஐசிசி அறிவுறுத்துவதாக வைத்துக் கொள்வோம்.

மறுபுறம் இந்திய அரசு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடக்கூடாது என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசை மீறி இந்திய அணியை ஐசிசி பாகிஸ்தான் மண்ணில் விளையாட வைக்க முடியாது. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் இந்தியா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியை புறக்கணித்து வெளியேற வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் இந்தியாவின் இடத்தில் இலங்கை அணி விளையாடுவதற்கு தகுதி பெறும்.

இதையும் படிங்க: அரை லட்சத்தை தொட்ட ஆண்டர்சன்.. ஓய்வு பெறும் முன் எவராலும் தொட முடியாத.. 2 உலக சாதனை

ஏனெனில் ஐசிசி விதிமுறைப்படி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் முதல் அணியாக விளையாடத் தகுதி பெறும். அதைத்தொடர்ந்து 2023 உலகக்கோப்பையில் டாப் 7 இடங்களை பிடித்த அணிகள் விளையாடுவதற்கு தகுதி பெறும். அந்த விதிமுறையின் அடிப்படையில் 2023 உலகக்கோப்பையில் இலங்கை 9வது இடத்தைப் பிடித்தது. எனவே இந்தியா வெளியேறினால் அந்த இடத்திற்கு இலங்கை தாமாக தகுதி பெற்று 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -