யார் பக்கம் பலம்…சென்னையா மும்பையா… இதில் வெல்லப்போவது யார்?

MS Dhoni CSK Ruturaj
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9 நகரங்களில் 51 நாட்களாக நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏப்ரல்7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோத உள்ளன.இரண்டாண்டு தடைக்கு பின்னர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விளையாடவுள்ள முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் அனைவரும் யார் வெற்றிபெறுவார்கள் என ஆவலோடு இப்போதிலிருந்தே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிக்கப்போவது சென்னையா மும்பையா என்பது குறித்து இப்போது பார்ப்போம்.சென்னை அணியை பொறுத்தவரையில் தோனி கேப்டனாக இருக்கும்வரை எதற்குமே கவலைப்பட தேவையில்லை.2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் முதல் சீசனிலிருந்து கடைசியாக விளையாடிய 2015 ஐபிஎல் வரை அனைத்து சீசனிலும் சிறப்பாக விளையாடிய அணி.

அதேவேளையில் மும்பை அணியும் சென்னை அணிக்கு சற்றும் சளைத்தது அல்ல. ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற அணி. ரோகித்சர்மா தலைமையில் இந்தமுறையும் பலம்வாய்ந்த அணியாக களம் இறங்குவதால் இந்த ஐபிஎல்-இன் முதல்போட்டியே பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. சென்னை அணியை பொறுத்தவரையிலும் தோனி மற்றும் சுரேஷ்ரெய்னா, முரளிவிஜய், பிராவோ, அம்பத்தி ராய்டு,டூபெளசி ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்டுவார்கள்.

- Advertisement -

அதேநேரத்தில் மும்பை அணியை பொறுத்தவரையில் ரோகித்சர்மா மற்றும் பும்ரா, பாண்டியா சகோரர்கள், டுமினி ஆகியோர் பேட்டிங்கில் கலக்கவுள்ளார்கள். சென்னை அணியை பொறுத்தவரையில் ஷேன் வாட்சன், டிவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்குர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் ஆகியோர் கலக்கவுள்ளனர். அதேவேளையில் மும்பை அணியோ பாட் கமின்ஸ், எவின் லூயிஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், கெய்ரன் பொலார்ட், பென் கட்டிங் ஆகியோர் என பலமான பந்துவீச்சு அணியை கொண்டுள்ளது.

இதுவரை ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 24 போட்டிகளில் நேரடியாக மோதியுள்ளது.
இதில் சென்னை அணி 11 வெற்றிகளையும், மும்பை அணி 13 வெற்றிகளையும் பெற்றுள்ளது.  இறுதியாக 2015ம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதின. அந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஎல்-ஐ பொறுத்தவரையில் இரு அணிகளுமே பலம்வாய்ந்த அணிகளாக இருப்பதால் சிறப்பாக செயல்படும் அணிக்கே வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.அதேவேளையில் கடைசியாக 2015ல் மும்பையிடம் கோப்பையை இழந்த சென்னை அணி தோற்றதால் இந்தமுறை அவர்களை வென்று பழிதீர்த்துக்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement