- Advertisement -
இந்திய கிரிக்கெட்

யார் இந்த மானவ் சுதர்? இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க என்ன காரணம்? – விவரம் இதோ

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று முள்ளான்பூர் நகரில் துவங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக அறிமுக வீரராக 23 வயதான மானவ் சுதர் என்பவருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. இடதுகை பவுலிங் ஆல்ரவுண்டரான அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவிற்கு மாற்று வீரராக பார்க்கப்படும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

யார் இந்த மானவ் சுதர் ? :

இந்நிலையில் இந்த மானவ் சுதர் என்பவர் யார்? அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க என்ன காரணம்? என்பது குறித்த சில தகவல்கள் இங்கு காணலாம். அந்த வகையில் 23 வயதான ஆல்ரவுண்டரான பவுலிங் ஆல்ரவுண்டான இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.

- Advertisement -

டொமஸ்டிக் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் அவர் ஐ.பி.எல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். ரெட் பால் ஸ்பெஷலிஸ்ட்டாக பார்க்கப்படும் இவர் 2022-23 ரஞ்சி தொடரில் 39 விக்கெட்டுகளை 6 போட்டிகளில் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

அதோடு முதல்தர போட்டிகளில் 29 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 945 ரன்கள் குவித்ததோடு 129 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதுமட்டும் இன்றி இந்திய ஏ அணிக்காக விளையாடிய அவர் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இது என்ன குஜராத் டைட்டன்ஸ் டெஸ்ட் டீமா? சுப்மன் கில்லை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

இப்படி தொடர்ந்து டொமஸ்டிக் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய அவருக்கு இன்று டெஸ்ட் போட்டிக்கான அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு டெஸ்ட் போட்டிக்கான அறிமுக தொப்பியை குல்தீப் யாதவ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -