5 டெஸ்ட் போட்டி ரத்து : வெற்றியாளர் யார் ? தொடரை கைப்பற்றியது யார் ? – ஐ.சி.சி கூறும் ரூல்ஸ் என்ன ?

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க செப்டம்பர் 10-ஆம் தேதி துவங்க இருந்த 5வது டெஸ்ட் போட்டியானது போட்டி ஆரம்பிக்கும் இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் கொரோனா அச்சம் காரணமாக ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அனைவரிடமும் இருந்து பெரிய கேள்வி யாதெனில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது யார் ? தொடரை கைப்பற்றியது யார் ? என்ற கேள்வி தான்.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்த 5வது போட்டி ரத்தமானது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் இந்த போட்டி நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த தொடரை வென்றது யார் ? என்று ஐசிசி தான் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் இந்த தொடரின் முடிவு குறித்து ஐசிசி கூறும் விதிமுறைகளை தான் நாம் இந்த பதிவை காண இருக்கிறோம். அதன்படி 5வது போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டால் இரண்டு அணிகளுக்குமே புள்ளிகள் ஒதுக்கப்படாது. இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஒருவேளை போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்படாமல் இந்திய அணி தானாக வந்து விலகி இருந்தால் இங்கிலாந்து அணி 5வது போட்டியில் வெற்றியாளராக அறிவித்து தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடியும்.

IND

ஆனால் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் விதிகளின்படி இரு அணிகளில் ஒன்று விலகினாலோ அல்லது இரு அணிகளும் சேர்ந்து போட்டியை ரத்து செய்தாலோ எந்தவித புள்ளியும் தரப்படாது என்றும் இந்தியா வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

ஆனால் போட்டி கொரோனா காரணமாக ரத்தாகவில்லை என்றும் இந்திய வீரர்களின் மன நிலை மற்றும் அணிக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே நிறுத்தப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஐ.சி.சி-யிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement