- Advertisement -
இந்திய கிரிக்கெட்

35 வருடம் 10 விக்கெட்ஸ்.. அனில் கும்ப்ளே போல அறிமுகம்.. தோனியின் பாராட்டுக்குரிய யார் இந்த அன்சுல் கம்போஜ்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் நான்காவது போட்டி ஜூலை 23ஆம் தேதி துவங்கியது. மான்செஸ்டர் நகரில் இருக்கும் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் இந்திய அணிக்காக 24 வயது இளம் வீரர் அன்சுல் கம்போஜ் அறிமுகமாக விளையாடத் தேர்வானார்.

கபில் தேவ் பிறந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அவர் ஜூனியர் லெவலில் கிரிக்கெட்டை விளையாட துவங்கினர். குளிர்ச்சியான வானிலையைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் கிரிக்கெட்டை விளையாட துவங்கிய காரணத்தாலேயே அவர் பந்தை ஸ்விங் செய்து துல்லியமாக வீசும் செய்யும் திறனைப் பெற்றார். தனது சொந்த ஊரில் உள்ள ராணா அகாடமியில் கிரிக்கெட்டை துவங்கிய அவர் நாளடைவில் என்சிஏவில் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மேற்பார்வையில் வளர்ந்தார்.

- Advertisement -

கும்ப்ளே போல் 10 விக்கெட்ஸ்:

உள்ளூரில் 2022ஆம் ஆண்டு அறிமுகமான அவர் தனது முதல் சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் 7 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் எடுத்தார். 2023 – 24 தொடரில் 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை அள்ளிய அவர் ஹரியானா முதல் முறையாக சயீத் முஸ்தாக் அலி கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அங்கே விளையாடுவதற்கு முன்பாக 2024 ரஞ்சிக் கோப்பையில் கேரளாவுக்கு எதிரானப் போட்டியில் அன்சுல் கம்போஜ் தனியாளாக மிரட்டினார் என்றே சொல்லலாம். ஏனெனில் 49 ரன்கள் கொடுத்த அவர் கேரளாவின் 10 விக்கெட்டுகளையும் எடுத்தார். அதன் வாயிலாக ரஞ்சிக் கோப்பையில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்த 3வது பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

- Advertisement -

கும்ப்ளே போல அறிமுகம்:

அப்படி 2024/25 ரஞ்சி கோப்பையில் மிரட்டலாக பவுலிங் செய்த அவர் மொத்தம் 74 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் காரணமாக 3.40 கோடிகளுக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர் 3 ஐபிஎல் போட்டிகளில் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் தோனி பாராட்டும் அளவுக்கு அசத்திய அவர் 2024/25 துலீப் கோப்பையிலும் 16 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதனால் 2024/25 துலீப் கோப்பையின் தொடர்நாயகன் விருதை வென்ற அவர் சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக விளையாடி 2 விக்கெட்டுகள் எடுத்தார். தற்போது மான்செஸ்டர் மைதானத்தில் 35 வருடங்கள் கழித்து இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 318வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: சி.எஸ்.கே வீரர் அறிமுகம்.. 3 மாற்றங்களுடன் 4 ஆவது போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த – கேப்டன் கில்

கடைசியாக இங்கே 1990ஆம் ஆண்டு ஜாம்பவான் அனில் கும்ப்ளே இங்கே அறிமுகமானார். ஆச்சரியப்படும் வகையில் அவர்களுடைய ஆங்கிலப் பெயரின் முதல் 2 எழுத்துக்களும் ஒன்றாக இருக்கிறது. கும்ப்ளே போல இவரும் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -