18 வயதில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 2வது கொல்கத்தா வீரராக சரவெடி சாதனை.. யார் இந்த ரகுவன்ஷி

- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் மூன்றாம் தேதி நடைபெற்ற 16வது லீக் போட்டியில் டெல்லியை 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 272/7 ரன்கள் குவித்து தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக சுனில் நரேன் 85, அங்க்ரிஸ் ரகுவன்ஷி 54, ரசல் 41, ரிங்கு சிங் 26 ரன்கள் எடுத்தனர். டெல்லிக்கு அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜே 3, இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தது. ஆனால் அதை சேசிங் செய்த டெல்லிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் 55, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 54 ரன்கள் எடுத்தும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

18 வயதில் மிரட்டல்:
கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்த கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. முன்னதாக இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்காக 18 வயதாகும் இளம் வீரர் அங்க்ரிஸ் ரகுவன்சி அறிமுகமாக களமிறங்கினார்.

அந்த வாய்ப்பில் 3வது இடத்தில் களமிறங்கி டெல்லி பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 54 (27) ரன்களை 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அரை சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அத்துடன் கொல்கத்தா அணிக்காக சுப்மன் கில்லுக்கு பின் (18 வருடம் 237 நாட்கள்) இளம் வயதில் அரை சதமடித்த 2வது வீரர் என்ற சாதனையும் (18 வருடம் 303 நாட்கள்) அவர் படைத்தார்.

- Advertisement -

இத்தனைக்கும் டெல்லியில் பிறந்த ரகுவன்சி பின்னர் 11 வயதில் மும்பைக்கு குடிபெயர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். அங்கே சிகே நாயுடு கோப்பையில் 9 போட்டிகளில் 765 ரன்கள் அடித்த அவர் அனைவரது கவனத்தை ஈர்த்தார். அதன் காரணமாக 2022 அண்டர்-19 உலகக் கோப்பையில் தேர்வான அவர் 6 போட்டிகளில் 278 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க: அங்கேயே எல்லாம் ஓவர் .. வேற வழியில்லை.. கொல்கத்தா அணிக்கெதிரான தோல்வி குறித்து – ரிஷப் பண்ட் வருத்தம்

அதனால் அந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்த அவர் இந்தியா அண்டர்-19 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அந்தளவுக்கு திறமையான அவரை இந்த வருடம் கௌதம் கம்பீர் அடங்கிய கொல்கத்தா நிர்வாகம் ஏலத்தில் வாங்கி தற்போது வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ள ரகுவன்சி அறிமுகப் போட்டியிலேயே சாதனை படைத்து கொல்கத்தாவுக்கு மற்றுமொரு தரமான வீரராக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement