அங்கேயே எல்லாம் ஓவர் .. வேற வழியில்லை.. கொல்கத்தா அணிக்கெதிரான தோல்வி குறித்து – ரிஷப் பண்ட் வருத்தம்

Pant
- Advertisement -

கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த தொடரில் தங்களது மூன்றாவது தோல்வியை பெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கி இருந்தது. கொல்கத்தா அணி சார்பாக களமிறங்கிய அனைவருமே அதிரடி காட்டியிருந்த வேளையில் அதிகபட்சமாக சுனில் நரேன் 85 ரன்களையும், ரகுவன்ஷி 54 ரன்களையும் குவித்து அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியானது 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே குவித்ததால் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : நாங்கள் முதலில் பந்து வீசும் போதே அனைத்துமே முடிந்து விட்டது. நாங்கள் பந்துவீச்சில் இன்னும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். முதலில் நாங்கள் பந்துவீசுகையில் பெரிய அளவில் ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம்.

- Advertisement -

இதுபோன்று சில நாட்களில் நடக்கத்தான் செய்யும். அதேபோன்று டார்கெட் மிகப்பெரியதாக இருந்ததால் நாங்கள் களமிறங்குவதற்கு முன்னதாக அதிரடியாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்து விளையாடினோம். இவ்வளவு பெரிய இலக்கை எட்ட முடியவில்லை என்றாலும் இலக்கினை நோக்கி செல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தோம். இந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.

இதையும் படிங்க : சுனில் நரேனை விடுங்க.. அந்த பையன் ஆடுறத பாக்க ரொம்ப சூப்பரா இருக்கு – ஷ்ரேயாஸ் ஐயர் புகழாரம்

இந்த தோல்வி எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் ஒரு அணியாக எங்களது சிறப்பான செயல்பாட்டை நிச்சயம் வெளிப்படுத்த முடியும். அடுத்த போட்டியில் நாங்கள் ஒவ்வொருவருமே எங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்குவோம் என்று நினைக்கிறேன். தற்போது நான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பி விளையாடி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement