விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஐ.சி.சி எப்போது ஹால் ஆஃப் பேம் விருது குடுக்கும்? – ரூல்ஸ் சொல்வது என்ன?

Virat and Rohit
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நேற்று ஜூன் 9-ஆம் தேதி திங்கட்கிழமை அறிவித்திருந்த ஹால் ஆஃப் விருதுக்கான பட்டியலில் மொத்தம் ஏழு வீரர்களுக்கு இடம் கிடைத்திருந்தது. அந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கும் ஹால் ஆப் பேம் விருதினை வழங்கி கௌரவித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மகத்தான பங்களிப்பை வழங்கிய அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஹால் ஆப் பேம் விருது எப்போது கிடைக்கும்? :

அதோடு அவருடன் சேர்த்து ஹசிம் அம்லா, கிரீம் ஸ்மித் மற்றும் சனா மிர், சார டைலர், மேத்யூ ஹைடன், டேனியல் விட்டோரி ஆகியோருக்கும் இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பாக ஏற்கனவே 10 வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்த வேளையில் நேற்று 11-வது இந்திய வீரராக மகேந்திர சிங் தோனிக்கும் இந்த மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாகவே மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வரும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஐசிசி இந்த விருதை எப்போது வழங்கும்? என்றும் அவர்களுக்கு இந்த மரியாதை கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் ரசிகர்கள் எழுப்பிய இந்த கேள்விக்கு ஐசிசி ரூல்ஸ் சொல்ல சொல்வது என்ன? என்பது குறித்தான தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் ஐசிசி வழங்கும் இந்த விருதினை பெறும் நபர்கள் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவ போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். அந்த கணக்கில் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த தோனிக்கு தற்போது 2025 ஆம் ஆண்டில் இந்த ஐசிசி விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை பொறுத்த வரை இன்னும் முழுமையாக அவர்கள் இருவரும் ஓய்வை அறிவிக்கவில்லை.

- Advertisement -

இருவருமே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக அறிவித்திருக்கிறார்கள். எனவே ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர்கள் இருவரும் எப்போது ஓய்வை அறிவிக்கிறார்களோ அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தான் அவர்கள் ஹால் ஆப் பேம் விருதுக்காக பரிசீலிக்கப்படுவார்கள் என்று ரூல்ஸ் கூறுகிறது.

இதையும் படிங்க : இங்கிலாந்தில் 2018 மாதிரி அதை சமாளிக்க முடியாதுன்னு தெரிஞ்சு.. விராட் கோலி ரிட்டையராகிட்டாரு.. பனேசர் பேட்டி

ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர்கள் ஓய்வை அறிவித்திருந்த வேளையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்காக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement