இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். அவர்களில் விராட் கோலி ஓய்வு பெற்றது பலருக்கும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது. ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் 36 வயதில் நல்ல ஃபிட்னஸ் கொண்டிருக்கிறார்.
அதன் காரணமாக இன்னும் சில வருடங்கள் விளையாடி விராட் கோலி 10000 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக பிசிசிஐ புதிய அணியை உருவாக்க விரும்புகிறது. எனவே பிசிசிஐ கழற்றி விடுவதற்கு முன்பாகவே ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றதாக நம்பப்படுகிறது.
சோர்ந்து போன கோலி:
இந்நிலையில் 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தடுமாறிய விராட் கோலி 2018இல் அதிலிருந்து முன்னேறி அபாரமாக விளையாடியதாக முன்னாள் வீரர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து அதே பந்துகளில் அவுட்டான விராட் கோலி இனிமேலும் நம்மால் முன்னேறி அசத்த முடியாது என்று கருதியதாலேயே ஓய்வு பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி பனேசர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் வேகமான பவுன்ஸ் ஆடுகளங்களில் விராட் கோலி 4, 5வது ஸ்டம்ப் பந்துகளில் மிகவும் தடுமாறினார். இங்கிலாந்தில் அந்த பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகும் என்று அவர்கள் உணர்ந்திருக்கலாம். ஒருவேளை அந்த நிச்சயமற்ற பாதையில் அவர் தீர்வுகளை உருவாக்காமல் இருந்திருக்கலாம். அதுவே அவருடைய உதவி பெறுவதற்கான முக்கிய காரணமாக இருந்திருக்கும்”
2018 மாதிரி கஷ்டம்:
“இங்கிருந்து இனிமேல் நாம் ஆர்சிபி மற்றும் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் முழு ஆற்றலையும் செலுத்தலாம் என்று விராட் கோலி நினைத்திருக்கலாம். எப்படி இருந்தாலும் அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பாக விளையாடினார். குறிப்பாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் அம்பாசிடராக இருந்தார்”
இதையும் படிங்க: 2 விக்கெட் எடுத்தா போதும்.. வாசிம் அக்ரமின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ஜஸ்ப்ரீத் பும்ரா
“அதில் அனைத்தையும் சாதித்து விட்டோம் என்று உணர்ந்த காரணத்தால் இது இளம் வீரர்களுக்கு வழி விடும் நேரம் என்ற கருதி விராட் கோலி இந்த முடிவை எடுத்திருக்கலாம். தற்போதைய விராட் கோலியால் 2018 செயல்பாடுகளை மீண்டும் வெளிப்படுத்துவது கடினமாக இருக்கும். ஏனெனில் கடந்த 12 – 18 மாதங்களாகவே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் திணறி வரும் அவர் இதுவரை அதை சமாளிப்பதற்கான தீர்வை கண்டறியவில்லை. எனவே இது இந்தியா புதிய சூப்பர் ஸ்டாரை கண்டறியும் நேரம் என்று கருதி விராட் கோலி விடை பெற்றுள்ளார்” எனக் கூறினார்.



