- Advertisement -
ஐ.பி.எல்

இஷான் கிஷன் விக்கெட் விடயத்தில் நடந்தது என்ன? அம்பயர் அவுட் கொடுக்க என்ன காரணம்? – விவரம் இதோ

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்த கருத்துகளே ரசிகர்கள் பலராலும் பகிரப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கையில் 2 ரன்களுக்கே முதல் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இஷான் கிஷன் விக்கெட் விடயத்தில் நடந்தது என்ன? :

பின்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் நிலைத்து நின்று அந்த அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தீபக் சாஹர் வீசிய 3-ஆவது ஓவரில் பேட்டிலே படாத பந்தை அவுட் என்று நினைத்து மைதானத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தார். அவரது அந்த விக்கெட் அந்த அணிக்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

முதலில் அந்த பந்திற்கு ஒயிடு கொடுக்க வந்த அம்பயரும் சற்று தடுமாற்றுத்துடன் கையை கீழே இறக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் அவுட் என்று முடிவையும் மாற்றிக் கொடுத்தார். அந்த நேரத்தில் இஷான் கிஷன் மைதானத்தை விட்டு வெளியேற ஆரம்பித்து விட்டதால் களத்தில் இருந்த அம்பயர் வினோத் சேஷன் அவுட் என்று தனது முடிவையும் உறுதி செய்தார். ஆனால் இஷான் கிஷன் வெளியேறிய பிறகு ஒளிபரப்பான ரீபிளேவில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெரிந்தது.

இதன் காரணமாக இஷான் கிஷன் அதிருப்தி அடைந்தார். ஒருவேளை அவர் மைதானத்தில் இருந்து நடக்காமல் இருந்திருந்தால் அம்பயர் அவுட் கொடுத்திருக்க மாட்டார். அதேவேளையில் அம்பயர் அவுட் கொடுத்திருந்தாலும் ரிவியூ எடுத்திருந்தால் இஷான் கிஷன் அந்த விக்கெட்டில் இருந்து தப்பித்து இருப்பார். ஆனால் இதில் எதுவுமே நடக்காமல் முற்றிலும் மாறுதலாக இஷான் கிஷன் தானாக நடந்ததும், அம்பயர் தாமதமாக அவுட் கொடுத்ததும் இந்த விக்கெட்டின் மீது சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இஷான் கிஷன் விடயத்தில் நடந்தது என்ன? அம்பயர் ஏன் அவுட் கொடுத்தார்? என்ற தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் அம்பயருக்கு அந்த விக்கெட் மீது சந்தேகம் இருந்ததாலே சற்று தயங்கினார். ஆனால் இஷான் கிஷன் தானாக முன்வந்து நடந்ததால் பேட்ஸ்மேனே விக்கெட்டை ஒப்புக்கொண்டார் என்ற காரணத்திற்காக அம்பயர் கைதூக்கி இருக்கலாம்.

இதையும் படிங்க : என்னோட ஆசையே அதுதான்.. ஆனா அது நடப்பது ரொம்ப கஷ்டம்னு எனக்கு தெரியும் – ஆட்டநாயகன் ட்ரென்ட் போல்ட்

அதேபோன்று அம்பயருக்கு அந்த விக்கெட்டில் சந்தேகம் இருப்பது உறுதியாக தெரிந்திருந்தால் பேட்ஸ்மேனை நிற்க வைத்து சோதனை செய்திருக்கலாம். ஆனால் பந்து பேட்டில் பட்டதாக நினைத்து பேட்ஸ்மேனே களத்தில் இருந்து வெளியேறியதால் அவரது முடிவை ஏற்றுக்கொண்டு அம்பயர் அந்த முடிவை உறுதி செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

- Advertisement -