இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேலையில் இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. அதனை தொடர்ந்து இன்று எலிமினேட்டர் போட்டி முல்லன்பூர் நகரில் நடைபெற இருக்கிறது.
எலிமினேட்டர் போட்டியின் போது மழை பெய்தால் என்ன நடக்கும்? :
இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்ததாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாடும்.
அதேவேளையில் இன்று தோல்வியை சந்திக்கப்போகும் அணி நேரடியாக இந்த தொடரில் இருந்து வெளியேறும். இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த எலுமினேட்டர் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்த தகவலை இங்கு பார்க்கலாம்.
அந்த வகையில் போட்டி நடைபெறும் முல்லன்பூர் நகரில் இன்று மழைபெய்ய வாய்ப்பு இல்லை என்றாலும் ஒருவேளை மழை பெய்தால் என்ன நடக்கும்? என்பது குறித்து பார்க்கையில் : 2025 ஐபிஎல் விதிமுறைப்படி எலிமினேட்டர் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது. எனவே மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஐந்து ஓவர் போட்டியாவது நடைபெறும்.
அப்படியும் ஐந்து ஓவர் கூட போட்டியை நடத்த வாய்ப்பு இல்லையெனில் புள்ளி பட்டியலில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் பார்க்கையில் தற்போதைய நிலையில் குஜராத் அணி மும்பை அணியை விட முன்னிலையில் இருப்பதால் போட்டி மழையால் கைவிடப்பட்டால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பஞ்சாப் கிங்ஸ் அணிகு எதிரான போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 7க்கு 7 வெற்றி.. லக்கி சார்ம் ஹேசல்வுட்.. கோப்பையை ஆர்சிபி பெயரில் எழுதச் சொல்லும் 2 வரலாற்று புள்ளிவிவரம்
இன்று இரவு முல்லன்பூரில் நடைபெறயிருக்கும் இந்த முக்கியமான எலிமினேட்டர் போட்டி வாழ்வா, சாவா போட்டி என்பதனால் இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.



