கோர கார் விபத்தில் சிக்கிய வெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர். வருத்தத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி – விவரம் இதோ

WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஓஷேன் தாமஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த வளர்ந்து வரும் பந்துவீச்சாளராக திகழ்கிறார். 23 வயதாகும் இளம் வீரரான அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 20 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 27 மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

thomas

- Advertisement -

அவர் கடைசியாக அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். அதன் பிறகு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை. மேலும் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜமைக்காவில் தனது ஆடி காரில் சென்றுகொண்டிருந்த தாமஸ் மற்றொரு காரின் மீது கோர விபத்து ஏற்படுத்தி உள்ளார். விபத்திற்கான சரியான காரணம் இன்னும் கிடைக்கவில்லை இருப்பினும் இந்த விபத்தில் தாமஸின் கார் தலைகீழாக கவிழ்ந்ததால் விபத்தில் சிக்கிய தாமஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் தாமஸுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகம் ஆகியவை அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement