இந்த பவர் போதுமா? முன்னாள் ஆஸி வீரர் கலாய்த்ததால் பற்றிய நெருப்பு.. வெ.இ கேப்டன் பதிலடி

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் சமன் செய்துள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் 2வது போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 27 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணிலும் 35 வருடங்கள் கழித்து காபா மைதானத்திலும் வென்று சாதனை படைத்தது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் காவெம் ஹோட்ஜ் 71, ஜோஸ்வா டா சில்வா 79 ரன்கள் உதவியுடன் போராடி 311 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 289/9 ரன்களில் தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. குறிப்பாக 24/4 என திண்டாடிய அந்த அணிக்கு உஸ்மான் கவாஜா 75, அலெக்ஸ் கேரி 65, கேப்டன் பட் கமின்ஸ் 64* ரன்கள் எடுத்ததால் தப்பிய ஆஸ்திரேலியா 22 ரன்கள் பின்தங்கிய சூழ்நிலையில் டிக்ளர் செய்தது.

- Advertisement -

கேப்டனின் பதிலடி:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கிர்க் மெக்கன்சி 41 ரன்கள் எடுத்த உதவியுடன் போராடி 193 ரன்கள் எடுத்தது. இறுதியில் 216 ரன்களை துரத்திய ஆஸ்த்ரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் 91 ரன்கள் எடுத்தும் இதர வீரர்கள் கை கொடுக்க தவறியதால் சொந்த மண்ணில் அவமான தோல்வியை பெற்றது. இந்த வெற்றிக்கு மொத்தம் 8 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சமர் ஜோசப் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரோட்னி ஹோஜ் “வெஸ்ட் இண்டீஸ் பரிதாபகரமான நம்பிக்கையற்ற அணி” என்று கலாய்க்கும் வகையில் விமர்சித்தார். ஆனால் அதுவே தங்களுக்கு இப்போட்டியில் வெற்றியை பெறுவதற்கான உத்வேகத்தை தங்களுக்கு கொடுத்ததாக தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் அவருக்கு போட்டியின் முடிவில் பதிலடி கொடுத்தது பின்வருமாறு.

- Advertisement -

“ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை வென்றதை விரும்புகிறேன். இது எங்களுக்கு பெரிய வெற்றியாகும். இந்த வருடங்கள் கழித்து இங்கே வென்றுள்ளோம். உங்களைப் பொறுத்த வரை இது வெறும் ஆரம்பம். நாங்கள் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். மிஸ்டர் ரோட்னி ஹோஜ் எங்களை நம்பிக்கையற்ற பரிதாபமான அணி என்று சொன்ன 2 வார்த்தைகள் பெரிய உத்வேகத்தை கொடுத்தது என்பதை இங்கே நான் சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க: 22 ரன்ஸ்.. கத்துக்குட்டியென குறைத்து எடை போட்ட கமின்ஸ்.. 9 வருட கௌரவத்தை இழந்த ஆஸ்திரேலியா

“இந்த உலகிற்கு நாங்கள் பரிதாபமானவர்கள் அல்ல என்பதை விரும்பினோம். அவரிடம் இந்த தசைகள் போதுமா? என்று நான் கேட்க விரும்புகிறேன். நாங்கள் இந்த உலகிற்கு எதனால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை காண்பிக்க விரும்புகிறோம்” என்று தன்னுடைய கையில் இருக்கும் பலத்தை அழுத்தி காட்டி மாஸ் பதிலடி கொடுத்தார்.

Advertisement