120 ரன்ஸ்.. பாகிஸ்தானை சொந்த ஊரிலேயே சாய்த்த வெ.இ.. 35 வருடங்கள் கழித்து வரலாற்று வெற்றி

WI vs PAK
- Advertisement -

பாகிஸ்தான் மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வந்தது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டியில் ஜனவரி 25ஆம் தேதி முல்தான் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை அடுத்து களமிறங்கிய அந்த அணி 163 ரன்கள் குவித்தது. 38-7 என தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 55, கிமர் ரோச் 25, ஜோமேல் வேரிக்கன் 36* ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக நோமன் அலி ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அசத்தல்:

அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தானை பவுலிங் செய்வதற்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் 154 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 4, மோட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக 9 முன்னிலையுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 244 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 52, தேவின் இம்லச் 35 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சஜித் கான் மற்றும் நோமன் அலி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இறுதியில் 254 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி பவுலிங் செய்வதற்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் நன்றாக பேட்டிங் செய்வதற்கு திணறியது.

- Advertisement -

வரலாற்று வெற்றி:

அந்தளவுக்கு பந்து வீச்சில் மீண்டும் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் 133 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக பாபர் அசாம் 31, முகமது ரிஸ்வான் 25 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதனால் 1 – 1* (2) என்ற கணக்கில் இந்த தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் சமன் செய்து கோப்பையை பாக்கிஸ்தான் முழுமையாக வெல்ல விடாமல் அசத்தியது.

இதையும் படிங்க: இதை செய்யாத ஜெய்ஸ்வாலை நம்பி செலக்ட் பண்ண.. ரோஹித்துக்கு தலை வணங்குகிறேன்.. ரெய்னா பாராட்டு

அத்துடன் 1990க்குப்பின் 35 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைத்தது. கடைசியாக 1990 பைசாலாபாத் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்தது. அதன் பின் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த அந்த அணி தற்போது வெற்றி பெற்று ஒயிட்வாஷ் தோல்வியையும் தவிர்த்துள்ளது.

Advertisement