- Advertisement -
உலக கிரிக்கெட்

2 ஒய்ட், 1 நோபால்.. வெ.இ சூப்பர் ஓவரில் திரில் வெற்றி.. வரலாற்றின் முதல் முயற்சியில் சோக் செய்த வங்கதேசம்

இந்திய டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு வங்கதேசம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 2வது போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவரில் போராடி 213/7 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சௌமியா சர்க்கார் 45, ரிசாத் ஹொசைன் 39, கேப்டன் மெஹதி ஹஸன் 32 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக அகில் ஹொசைன் 2, அலிக் அதனாஸ் 2, குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். சொல்லப்போனால் அந்த அணி 50 ஓவர்களையும் 5 ஸ்பின்னர்களை வைத்து வீசியது.

- Advertisement -

முதல் சூப்பர் ஓவர்:

இதன் வாயிலாக ஒரு ஒருநாள் போட்டியில் 50 ஓவர்களையும் சுழல் பந்துகளாக வீசிய முதல் அணி என்ற அரிய உலக சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்தது. அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் 50 ஓவரில் சரியாக 213/9 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதிகபட்சமாக கேசி கார்ட்டி 35, கேப்டன் ஷாய் ஹோப் 53* ரன்கள் எடுத்தனர்.

குறிப்பாக கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெறும் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் சாய்ப் ஹசன் வீசிய அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த வெஸ்ட் இண்டீஸ் ஒரு விக்கெட்டை இழந்தது. குறிப்பாக கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்ட போது காரி பியர்ரே 2 ரன்கள் மட்டுமே எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிசார்த் ஹுசைன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சோக் செய்த வங்கதேசம்:

அதை அடுத்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. கடந்த பல வருடங்களாக விளையாடி வரும் வங்கதேச அணி தங்களுடைய வாழ்நாளில் இப்போட்டியில் தான் முதல் முறையாக சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. அந்த வரலாற்று சிறப்புமிக்க சூப்பர் ஓவரை வங்கதேசத்துக்காக வீசிய முஸ்தஃபிஸூர் ரகுமான் 1 விக்கெட் எடுத்து 10 ரன்கள் கொடுத்தார்.

அவருக்கு எதிராக ரூத்தர்போர்ட் 2வது பந்தில் டக் அவுட்டான போதிலும் ஷாய் ஹோப் 7* (3), ப்ரண்டன் கிங் 3* (2) ரன்கள் எடுத்தார்கள். அடுத்ததாக 11 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு எதிராக அகில் ஹுசைன் சூப்பர் ஓவரை வீசினார். அந்த ஓவரில் 2 ஒய்ட், 1 நோ-பால் போட்ட ஹொசைன் வங்கதேசம் எளிதாக வெற்றி பெற வாய்ப்பை வழங்கினார்.

இதையும் படிங்க: எப்படியும் ராணாவை விடமாட்டீங்க.. பேசமா அந்த தமிழக வீரரை தூக்கிட்டு குல்தீப்பை சேருங்க.. பதான் பேட்டி

ஆனால் அதையும் தாண்டி சோக் செய்த வங்கதேசம் 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து அசத்தியது

- Advertisement -