இதைவிட ஸ்ட்ராங்கான டீம் இருக்கவே முடியாது. டி20 உ.கோ வெஸ்ட் அணி வீரர்களின் லிஸ்ட் இதோ

WI

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான அனைத்து நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் தங்களது அணிகளை அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்து இருந்த நிலையில் அனைத்து நாடுகளும் இந்த டி20 தொடரில் பங்கேற்கும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

wi 1

அந்த வகையில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியும் தங்களது அணியை அறிவித்து உள்ளது. இதில் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த ரவி ராம்பால் அணிக்குத் திரும்பியுள்ளார். கடைசியாக 2015ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய அவர் தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இடம்பெற்றுள்ளார்.

- Advertisement -

அவரது வருகை நிச்சயம் அந்த அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அதிக அனுபவம் வாய்ந்த ரவி ராம்பால் விக்கெட் டேக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று உலகக்கோப்பை அணியில் முதல் முறையாக ஆல்ரவுண்டர் ரோஸ்டன் சேஸ்க்கும் இடம் கிடைத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் கரீபியன் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

wi 2

அதேபோன்று ஏகப்பட்ட வீரர்கள் திறமையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்து உள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அணியை பார்க்கும்போது நிச்சயம் இவர்களை விட பலமான அணி இருக்க முடியாது என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு அனைத்து வீரர்களும் மிகவும் பலமாக உள்ளனர். பொல்லார்ட் தலைமையிலான இந்த அணி நிச்சயம் உலக கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அறிவித்த அணி வீரர்களின் பட்டியல் இதோ :

- Advertisement -

கைரன் பொல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரான், பேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆண்ட்ரே பிளட்சர், க்றிஸ் கெயில், ஹெட்மயர், எவின் லீவிஸ், மெக்காய், லெண்டில் சிம்மன்ஸ், ரவி ராம்பால், ஆண்ட்ரே ரசல், ஓஷன் தாமஸ், ஹேடன்வால்ஷ்

Advertisement