ரிஷப் பண்ட்டிடம் தோனியின் நிழலையும் ஸ்டைலையும் பார்க்கலாம் – முன்னாச் கோச் அதிரடி கருத்து

Rishabh Pant MS Dhoni
- Advertisement -

டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் ஜாம்பவான் எம்எஸ் தோனிக்கு பின் 3 வகையான இந்திய அணியிலும் நம்பிக்கை நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட முடியும் என்பதை நிரூபித்து போராடி வருகிறார். கடந்த 2017இல் அறிமுகமான இவர் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த சூழ்நிலையையும் பற்றி கவலைப்படாமல் அதிரடி சரவெடியாக செயல்பட்டு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையும் படைத்து “காபா” போன்ற சில மறக்க முடியாத வரலாற்று வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

Rishabh Pant

- Advertisement -

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 வயதிலேயே தோனியை மிஞ்சி நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ள அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இன்னும் கால்தடம் பதிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். ஐபிஎல் தொடரிலும் பெரும்பாலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவர் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் 58 போட்டிகள் என்று அதிகப்படியான வாய்ப்புகளை பெற்ற போதிலும் இதுவரை அனைவரின் மனதில் நிற்கும் அளவுக்கு எந்த ஒரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டதில்லை என்பதால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். அந்த நிலைமையில் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்த ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் இக்கட்டான நிலைமையில் முதல் முறையாக சதமடித்து வெற்றி பெற வைத்த அவர் தம்மால் வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.

தோனியின் சாயல்:
ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் தடுமாறும் அவரை முற்றிலுமாக நீக்காமல் சில போட்டிகளில் நீக்கி வாய்ப்பின் அருமையை உணர்த்தி சஞ்சு சம்சன் போன்ற காலம் காலமாக வாய்ப்புக்காக ஏங்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் உயிர்நாடியான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே சாதித்து தன்னை உலகத்தரம் வாய்ந்தவராக நிரூபித்துள்ள அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராக உருவாக்க நினைக்கும் அணி நிர்வாகம், கேப்டன், தேர்வுக்குழு என அனைவரும் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.

Pant

இந்நிலையில் ரிஷப் பண்ட்டுக்குள் எம்எஸ் தோனியின் நிழலும் ஸ்டைலும் இருப்பதால் நிச்சயம் அவரால் சாதிக்க முடியும் என்று முன்னாள் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருக்குள் சற்று தோனியும் உள்ளார். பொதுவாகவே நீங்கள் ஒருவரை உங்களுடைய ரோல் மாடலாக வைத்து வளரும் போது அவர் உங்களுக்குள்ளேயே ஒரு பகுதியாக வந்து விடுவார். அந்த வகையில் ரிஷப் பண்ட்டிடம் தோனியை சற்று உங்களால் பார்க்க முடியும். ஏனெனில் மகத்தான ஒருவரை ரோல் மாடலாக வைத்து வளர்ந்து வருவதால் அவரிடம் தோனியின் நிழல் காணப்படுகிறது”

- Advertisement -

“அவரும் அனைவரிடமும் மிகவும் ஜாலியாக நட்பாக பழகக்கூடியவர். களத்திற்கு வெளியே அவர் எப்போதும் சிரிப்பதை விரும்புபவர். மேலும் களத்திற்கு வெளியே இருக்கும் போது எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் விலகி நிதானமாக இருக்க கூடியவர். அவர் வேடிக்கை பார்க்க விரும்பும் ஒருவர். அவர் மற்ற விளையாட்டுகளை விரும்புகிறார். அவர் ஒரு அற்புதமான பையன்” என்று கூறினார்.

Sridhar

அவர் கூறுவது போல தன்னுடைய ரோல்மாடல் எம்எஸ் தோனி தான் என்று பலமுறை வெளிப்படையாக பேசிவரும் ரிஷப் பண்ட் அவரைப்போல் வர வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். அவரைப்போலவே ஜாலியான குணத்தை கொண்டுள்ள இவர் இடதுகை பேட்ஸ்மேனாக தன்னுடைய நாளில் எதிரணிகளை துவம்சம் செய்யும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டுள்ளார்.

- Advertisement -

மேலும் ஆரம்ப காலங்களில் தோனியும் தடுமாறியதை போல் ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறும் ரிஷப் பண்ட் நிச்சயம் வரும் காலங்களில் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு அவரைப் போலவே இந்தியாவுக்கு நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

இதையும் படிங்க : மன்கட் செய்ததற்கு பழி வாங்கலா? இங்கிலாந்தில் இந்திய வீராங்கனையின் உடைமைகள் திருட்டு, புகாரால் ரசிகர்கள் அதிர்ச்சி

அந்த வகையில் தற்போது 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் நிச்சயம் அடுத்த 10 வருடங்களுக்கு இந்திய பேட்டிங் துறையில் முதன்மை விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பதாலேயே ரிக்கி பாண்டிங் போன்ற நிறைய வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் அவருக்கு விமர்சன நேரங்களிலும் தொடர்ந்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement